Cinema News
மகள் இறந்த துக்கத்திலேயே ரத்தம் புரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!.. என்ன பேசினார் தெரியுமா?..
கடந்த செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை 3 மணிக்கு விஜய் ஆண்டனி வீட்டில் நடந்த சோக நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமின்றி தமிழ் மக்கள் மனங்களையும் மீள முடியாத வேதனையில் ஆழ்த்தியது.
16 வயதே ஆன விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தனது மகள் உயிரிழந்து 10 நாட்களாக வெளியே வராமல் இருந்த விஜய் ஆண்டனி அடுத்த வாரம் வெளியாக உள்ள ரத்தம் படத்தின் புரமோஷனுக்காக தனது இளைய மகள் லாராவை அழைத்துக் கொண்டு வந்த நிலையில், மேடையில் ஏறி கனத்த இதயத்துடன் அவர் பேசிய பேச்சுக்கள் ரசிகர்களை தற்போது உருக வைத்துள்ளது.
இதையும் படிங்க: இளைய மகளுடன் பட புரமோஷனுக்கு திடீரென வந்த விஜய் ஆண்டனி!.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!..
மகள் மீராவின் மரணம் குறித்து அந்த நிகழ்ச்சியில் யாருமே பேசக் கூடாது என்கிற கட்டுப்பாட்டுடன் நிகழ்ச்சி நடைபெற்றாலும், இயக்குநர் சி.எஸ். அமுதன் என்னோட அப்பா இறந்த போது சினிமா உலகில் இருந்து வந்த ஒரே நபர் விஜய் ஆண்டனி தான். அப்போது அவர் எனக்கு சொன்ன ஒரே வார்த்தையை இப்போ அவருக்கு சொல்கிறேன் என “நாங்க இருக்கோம் பிரதர்” என நம்பிக்கை வார்த்தைகளை கூறி விட்டு விடைபெற்றார்.
அடுத்ததாக பேசிய விஜய் ஆண்டனி சினிமான்னா என்னன்னே எனக்குத் தெரியாது.. இசை குறித்த அறிவே இல்லாத போது சி.எஸ். அமுதன் அப்பா தான் எனக்கு மியூசிக்கை எளிமையாக கற்றுக் கொடுத்தார்.
இதையும் படிங்க: காண்டாக்கிய இறைவன்!… கல்லாகட்ட போகும் சந்திரமுகி 2.. ராகவா லாரன்ஸுக்கு எங்கயோ மச்சம்!..
சி.எஸ். அமுதன் அப்பா இல்லைன்னா இன்னைக்கு நான் இல்லை. என்னால அவரோட படம் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன் என பேசினார்.
மேலும், ரத்தம் திரைப்படம் நல்லா இருக்கும், நம்பி வந்து பாருங்க என படத்திற்கான புரமோஷனை மனவேதனைகளை மறைத்துக் கொண்டு பேசியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.