Cinema News
அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.. மகளை நினைத்து உருகும் விஜய் ஆண்டனி!…
Vijay Antony: கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. விஜய் நடித்த சுக்ரன், வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கும் காதலில் விழுந்தேன், அங்காடித்தெரு, நான், சலீம், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 என பல படங்களிலும் இசை இவர்தான்.
சில படங்களில் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் இசையில் உருவான பல படங்களில் பாடியும் இருக்கிறார். நான் திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். முதல் படமே வெற்றி. அடுத்து சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். அந்த படங்களும் வெற்றி. அதிலும் பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: ஜெயிலரால் வந்த பயம்!.. தலைவர் 171-க்கு ரஜினி போட்ட கண்டிஷன்… லோகேஷ்தான் பாவம்!..
எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் கையில் நிறைய படங்களை வைத்திருக்கும் நடிகராகவே மாறினார். இவர் நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளரும் இவர்தான். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிச்சைக்காரன் 2 படமும் வெற்றி பெற்றது.
இந்நிலையில்தான் இவரின் மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். 12ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனிக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கூல் சுரேஷ் கன்னத்துல ஓங்கி ஒண்ணு விட்ருக்கணும்!.. கடுப்பான தொகுப்பாளினி கறாரான பேட்டி!..
இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது மகள் குறித்த ஒரு உருக்கமான பதிவை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். என் மகள் மீரா அன்பானவள்.. தைரியமானவள்.. அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வன்மம் இல்லாத அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள்.
அவள் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.. அவளுன் சேர்ந்து நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவழித்து வருகிறேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்களை அவளே தொடங்கி வைப்பாள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல்களையும், தைரியத்தையும் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 200 கோடி போச்சி!.. லியோ படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!. ஜெயிலர தாண்டுறது கஷ்டம்தான்!..