காமெடி நடிகருக்காக அப்பாவை தட்டி கேட்ட விஜய்!.. நட்புக்கு ஒன்னுன்னா விடமாட்டாராம்!...

vija sac
அப்பா சினிமா இயக்குனர் என்பதால் அவர் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் விஜய். அதுவும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால், அடம்பிடித்து நடிக்க வந்தார் விஜய். விஜய் நடிப்பில் உறுதியாக இருந்ததால் சொந்த காசை போட்டு ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார் எஸ்.ஏ.சி.
அந்த படம் ஓடவில்லை. அதன்பின் கவர்ச்சியை நம்பி ரசிகன் படத்தை எடுத்தார். இந்த படம் கிளாமருக்காகவே ஓடியது. ஸ்ரீவித்யாவை வைத்து கூட ஒரு கிளாமர் காட்சியை வைத்திருந்தார் எஸ்.ஏ.சி. அதன்பின் மாண்புமிகு மாணவன், தேவா என சில படங்களை இயக்கினார். ஆனால், படங்கள் ஓடவில்லை.
இதையும் படிங்க: அது ரஜினியே இருந்தாலும் செல்வராகவனிடம் அது மட்டும் நடக்காதாம்! இப்படி ஒரு ரூலா?
அதன்பின்னரே விக்ரமனின் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் விஜய். அதன்பின் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னேறினார். கில்லி திரைப்படத்தின் வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
விஜயின் எல்லா படங்களிலும் அவருடன் எப்போதும் 5 நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் விஜயின் காதலுக்கு உதவி செய்வார்கள். அல்லது அவர்களின் காதலுக்கு விஜய் உதவி செய்தார். பெரும்பலான காட்சிகளில் விஜயுடன் அவரின் நண்பர்கள் உடனிருப்பார்கள். நடிகர்கள் மாறினாலும் காட்சிகள் எப்போதும் மாறாது.
அப்படி விஜயுடன் தாமு, வையாபுரி, சாப்ளின் பாலு, விவேக், மயில்சாமி போன்றவர்கள் அதிக படங்களில் நடித்துள்ளனர். இதில், சாப்ளின் பாலு முக்கியமானவர். விஜய் நடிக்க வந்த புதிதில் இருந்து அவருடன் தொடர்ந்து நடித்த நடிகர் இவர். விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய மாண்புமிகு மாணவன் படத்திலும் அவர் நடித்திருந்தார்.
படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் செய்த தவறுக்காக சாப்ளின் பாலுவின் கன்னத்தில் அறைந்துவிட்டாராம் எஸ்.ஏ.சி. உடனே, கோபப்பட்ட விஜய் அப்பாவிடமே போய் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்த தகவலை சாப்ளின் பாலு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சொல்லி இருக்கிறார்.