அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த தப்பு… ஓபனாக ஒப்புக்கொண்ட இயக்குனர் தரணி!…

Ghilli: நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் திரைப்படமான கில்லி   ரீ- ரிலீஸ் பிறகு பல விஷயங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த ஒரு தவறு குறித்து இயக்குனர் தரணி தெரிவித்திருப்பது தற்போது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து கோலிவுட்டில் மெகா ஹிட் என எந்த படமும் இடம்பெறவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், ஜெயம் ரவியின் சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மட்டுமே சுமார் ரீச் பெற்றது. ஆனால் அப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க: கேப்டன் மேட்டர் கேட்கவே மெர்சலா இருக்கே!.. ஜோடி போட்டது நடிச்சது இவ்வளவு பேரா!.. அடேங்கப்பா!..

இதனால் தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் மெகா ஹிட்டான கோலிவுட்டின் பழைய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அந்த வகையில் ரஜினிகாந்த் பாபா, கமல்ஹாசனின் ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுஷின் 3 உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படங்களின் ரசிகர்கள் பட ரிலீஸை தியேட்டரில் ஆடி பாடி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை எடுத்து விஜய் நடிப்பில் மெகா ஹிட் திரைப்படமான கில்லி சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் மட்டுமே 10 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க தெறிக்க எதிரிகளை வேட்டையாடும் விஷால்.. எல்லாம் யாருக்காக தெரியுமா?.. ரத்னம் விமர்சனம்!

இதனால் அப்படத்தின் சில சுவாரசிய சம்பவங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அப்படங்களின் பிரபலங்களும் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்படி இயக்குனர் தரணி அளித்த பேட்டி ஒன்று அர்ஜுனரு வில்லு பாடலில் உண்மையாகவே விஜய் ஜீப்பை தூக்கினாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து தரணி,  திரிஷாவை அழைத்துக் கொண்டு வரும் விஜய் ஒரு ஜீப்பை ஒட்டி வருவார். அதன் டயர் பஞ்சரானதால் ரிப்பேர் செய்யும்போது விஜய் தூக்குவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாருதி போன்ற கார்களை தூக்க முடியும். ஜீப்பை தூக்குவது கஷ்டம் தான். ஹீரோ என்பதால் மாஸுக்காக அதை வைத்தோம் எனவும் தெரிவித்து இருந்தார்.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago