More
Categories: Cinema News latest news

விஜய் மேல இவ்ளோ வெறியா?.. கட்டுக்கடங்காத கூட்டத்தில் மிதந்த தளபதி!.. மலையாள நடிகர்கள் மனசு நோகாதா?

விஜய் நடித்து வரும் கோட் என அழைக்கப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு எந்தவொரு தொல்லையும் இல்லாமல் இலங்கையில் நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார். இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினால் அரசியல் ரீதியான பிரச்சனைகள் வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், கேரளாவிலேயே படப்பிடிப்பை நடத்தி விடலாமே என விஜய் யோசனை சொல்ல சில நாட்களுக்கு முன்னதாகவே பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் கேரளாவுக்கு சென்று விட்டனர்.

இன்று தனியாக சாட்டர்ட் விமானம் மூலமாக நடிகர் விஜய் கேரளாவுக்கு வருவதை அறிந்த கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு குவிந்ததை போல விஜய்யின் வருகையை பார்க்க விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?

பேருந்துகள் மீது ஏறிக் கொண்டும், மொட்டை மாடிகளிலும் விஜய்யை காண ரசிகர்கள் குவிந்தனர். நடிகர் விஜய் காரில் ஏறியதும் ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்று விடலாம் என நினைத்திருந்தார். ஆனால், அவரது காரை ஒரு இன்ச் கூட நகர விடாமல் ரசிகர்கள் அலைமோதிக் கொண்டு தளபதியை பார்க்க வேண்டும் என முண்டியடித்த காட்சிகளும் கார் கண்ணாடிகள் உடைப்பட்ட காட்சிகளும் பதை பதைப்பை ஏற்படுத்தி விட்டது.

ரசிகர்கள் மீது கார் ஏறினால் பெரிய பிரச்சனையாகி விடும் என்கிற பயம் நடிகர் விஜய்க்கு அதிகமாகவே இருந்தது. ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களை விட தாறுமாறான வெறித்தனமான அன்புடன் கேரள ரசிகர்கள் இப்படி இருப்பதை பார்த்தால் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்டோருக்கே எரியுமா? எரியாதா? என நெட்டிசன்கள் ஏகப்பட்ட வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரோகினிக்கு பயத்தை காட்டிய விஜயா… முத்துவுக்கு காரை பரிசாக கொடுத்த மீனா…

வெங்கட் பிரபு கேரளாவில் நிம்மதியாக கோட் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்து விடுவாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அவுட் டோர் ஷூட்டிங் என்பதற்காகத்தான் கேரளாவுக்கு சென்றுள்ளனர். விமான நிலையத்துக்கே இந்த கதி என்றால் இன்னும் சில நாட்களில் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை.

 

Published by
Saranya M

Recent Posts