அஜீத் டயலாக்.... ஏதாவது உள்குத்து இருக்காடான்னு இயக்குனரிடம் கேட்ட விஜய்
தளபதி விஜய் தனது 68வது படமாக கோட்டில் தூள் கிளப்பி வருகிறார். இந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. வரும் 5ம் தேதி படம் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பொங்கியுள்ளது. படத்தில் பிரசாந்த், பிரபுதேவா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். தந்தை மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்க, ஏஐ டெக்னாலஜியில் விஜயகாந்த் நடித்துள்ளார். யுவனின் இசையில் 4 பாடல்கள் வந்துள்ளன.
Also read: கோட் படத்துக்கு முழு கதையும் கேட்டபிறகு வெங்கட்பிரபுவிடம் விஜய் சொன்ன அந்த விஷயம்…!
வெங்கட்பிரபு அஜீத்துக்கு ஒரு மங்காத்தா என்ற மெகா ஹிட் கொடுத்தாரு. அதே போல தற்போது தளபதி விஜய்க்கு கோட் கொடுத்துள்ளார். அஜீத்தே கோட் படம் 100 மங்காத்தா மாதிரி வர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். அஜீத் மாதிரி விஜய் சார் எமோஷனலைக் காட்ட மாட்டார்னு வெங்கட்பிரபு சொல்லி இருக்கிறார்.
அஜீத் கோட் படம் பற்றி நிறைய ஆர்வமாக கேட்பார். 'சாங் ஏதாவது காட்டு'ன்னு சொன்னார். மட்ட சாங்கைக் கூட காட்டுனேன். பயங்கரமா ஹேப்பியா ஆகிட்டாரு. அவரும் குட் பேட் அக்லி சாங்கைக் காட்டுனாரு.
தளபதி படம் பண்றோம். தலயப் போய்ப் பார்க்குறோம். ஆனா தளபதி அங்க என்ன நடந்ததுன்னு கேட்கல. என்னடா ஜாலியா என்ஜாய் பண்ணினியான்னு தான் கேட்டாரு. மங்காத்தா சூட்டிங் நடக்கும்போது வேலாயுதம் படம் சூட்டிங் நடக்குது. அப்போ விஜயைப் போய் பார்த்தேன். 'என்னடா நல்லா இருக்கியா'ன்னு கேட்டார்.
இரண்டு பேரு கூடயும் சேர்ந்து போட்டா எடுக்கணும்னு கேட்டேன். அதுக்கு கூட ஓகே சொல்லிட்டாங்க. இரண்டு பேரையும் வச்சி படம் பண்ணனும்னு சொன்னேன். அதுக்கு என்னடா நல்ல கதை பண்ணுன்னு சொன்னாங்க. ஆனா நெகடிவ் ரோல் நான் தான் பண்ணுவேன்னு ரெண்டு பேரும் போட்டி போட்டாங்க.
Also read: அஜித்தும் நானும் இததான் நினைச்சுட்டு இருக்கோம்! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்
நான் அஜீத் சாரோட சத்தியமா இனிமே குடிக்கக்கூடாதுடா டயலாக்கை விஜய்கிட்ட பேசச் சொன்னேன். அப்போ 'டேய் இதுல ஏதாவது உள்குத்து இருக்காடா'ன்னு கேட்டாரு. அப்போ கூட அவர் பேசிட்டாரு. ஆனா உள்குத்து கிடையாது. கரெக்டா இரண்டு பேரும் சொல்றதுக்கான சிச்சுவேஷன் எனக்கு அமைஞ்சது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.