அண்ணாவ் பிக் ஃபேன் அண்ணாவ்! ஏர்போர்ட்டில் ரசிகர் சொன்னதுக்கு விஜயின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Vijay at Airport: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்த விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்திற்காக பிஸியாகி விட்டார். சமீபத்தில்தான் லியோ படத்தின் வெற்றிவிழா கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.

விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.இந்த நிலையில் தளபதி 68 படத்திற்காக இன்று அதிகாலை விஜய் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயை பார்க்க அனைவரும் கூடினர்.

இதையும் படிங்க: அது வெற்றி விழாவே கிடையாது!.. லோகேஷே விருப்பமே இல்லாமல் தான் வந்தாரு – போட்டுத்தாக்கிய பிரபலம்?..

காரில் இருந்து இறங்கியதும் விஜயை பார்த்து அங்கு இருந்தவர்கள் போட்டோ எடுக்க குவிந்தனர். ஆனால் விஜய் தலை குனிந்தபடியே முகத்தில் மாஸ் அணிந்து கொண்டு எந்தவொரு ரியாக்‌ஷனும் இல்லாமல் விமான நிலையத்திற்குள் சென்றார்.

அப்போது ஒரு ரசிகர் ‘அண்ணாவ் நான் உங்க பிக் ஃபேன் அண்ணாவ்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அதைக் கேட்டும் விஜய் கையசைக்கவோ அல்லது பார்த்து சிரிக்கவோ இல்லை. இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: என் மனைவி சங்கீதா மாதிரியே பேசுறீங்க!.. லியோ பட நடிகையை பார்த்து விஜய் இப்படி சொல்லியிருக்காரே!

இதை பார்த்த ரசிகர்கள் அத்தனை பேர் கூடியிருந்த மேடையில் அந்தளவுக்கு பேசிய விஜய் பொது இடத்தில் அவரை சார்ந்த ரசிகர் ஒருவர் கத்திக் கொண்டிருக்க ஆனால் விஜய் அவரை கண்டுக்காமலேயே செல்கிறார். இவருக்கு மூத்த நடிகரான ரஜினி விமான நிலையத்தில் வந்து இறங்கியதில் இருந்து,

பார்க்கிறவர்களுக்கு எல்லாம் வணக்கத்தைப் போட்டுக் கொண்டு புயல் மாதிரி நடந்து போவார். ஆனால் அவரை பின்பற்றி வந்த விஜய் இப்படி பண்ணலாமா? என்று வழக்கம் போல் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிவாஜியை பார்க்கும் ஆர்வத்தில் விழுந்தடிச்சு ஓடிய வடிவேலு! நடந்த சம்பவமே வேற – நடிகர் திலகம்னா சும்மாவா?

 

Related Articles

Next Story