லியோ படத் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண விழாவில் விஜய்.. இப்போவும் சிங்கிளாவே போறாரே?..
இயக்குநர் அட்லீ மனைவி பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கி இன்று நடைபெற்ற லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரை நடிகர் விஜய் சிங்கிளாகவே சென்று வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
முன்பெல்லாம் எங்கே சென்றாலும் தனது மனைவி சங்கீதாவை உடன் அழைத்துச் செல்வார் நடிகர் விஜய். ஆனால், சமீப காலமாக நடிகர் விஜய் தனி மரமாகவே பல இடங்களுக்கு சென்று வருவது அவரது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு என்ன ஆச்சுன்னு துடித்துப் போன ரசிகர்கள்!.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கங்குவா ஹீரோ!..
செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், கெளதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்ட நிலையில், நாளை முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகளவில் ரசிகர்களை கவர காத்திருக்கிறது.
இந்நிலையில், இன்று இரவு நடைபெற்ற லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வெள்ளை மற்றும் ப்ளூ கோடு போட்ட சட்டையை அணிந்து கொண்டு லேசான வெள்ளை தாடியுடன் தளபதி 68 படத்தின் லுக்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: மன்சூர் அலிகான் தப்பா ஒண்ணுமே பேசல!.. கிஸ் சீன் பத்தி ஹீரோயின் கேட்க மாட்டாங்க.. ரேகா நாயர் விளாசல்!
ஆனால், இந்த முறையும் நடிகர் விஜய்யுடன் சங்கீதா விஜய் வராததை அறிந்த ரசிகர்கள் இருவரையும் எப்போதுதான் ஒன்றாக சந்திக்கப் போகிறோமோ என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.