More
Categories: Cinema News latest news

விஜய் ரசிகர்களுக்கு புதிய அப்டேட்.. ஜனவரியில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

சான் பிச்சர் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அனிருத் இசையில் கத்தி, மாஸ்டர் ஆகிய படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதனால் தற்போது பீஸ்ட் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

தற்போது இப்படத்தின் ஆறாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.

vijay

அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ள படக்குழு கிளைமேக்ஸ் காட்சியை எடுப்பதற்காக ரஷ்யா செல்லவிருக்கிறதாம். அங்கு கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை பிரமாண்டமாக படமாக்க உள்ளார்களாம்.

இதையும் படிங்க: சலிக்காமல் சகலத்தையும் காட்டும் சாக்‌ஷி… கிறுகிறுக்க வைக்கும் புகைப்படம்..

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் டிசம்பரில் இதன் படப்பிடிப்பை முடித்து ஜனவரி மாதம் இப்படத்தின் டீசரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.

படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் இயக்குனர் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடிப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Published by
adminram

Recent Posts