Connect with us

Cinema News

ஹெச். வினோத்துடன் கமிட் ஆகும் தளபதி.. பரபரப்பான அப்டேட்!..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு லோகேஷ் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ப்ளாக் பஷ்டர் ஹிட் கொடுத்ததை அடுத்து லியோ கண்டிப்பாக பெரும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக விஜய் ஒரு படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்ததுமே அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிடுவார். அடுத்து எந்த படத்தில் நடிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கிவிடுவார். இந்த நிலையில் லியோ படத்தின் பாதி படப்பிடிப்பு ஏற்கனவே காஷ்மீரில் முடிந்துவிட்டது.

தற்சமயம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார் லோகேஷ். இந்த நிலையில் அடுத்து யாருடைய படத்தில் நடிக்கலாம் என்கிற யோசனையில் இருக்கிறார் நடிகர் விஜய். அடுத்ததாக மீண்டும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் படம் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளார் விஜய்.

ஆனால் அதற்கு அடுத்ததாக தன்னுடைய 69 வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ் அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவர் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் வெகுவாக பாராட்டுகளை பெற்றுள்ளன.

H.Vinoth
H.Vinoth

ஆனால் அதிகப்பட்சம் விஜய் படத்தை இயக்கும் இயக்குனர்களோடு அஜித் படம் பண்ண மாட்டார். அதே போல அஜித் படத்தை இயக்கும் இயக்குனர்களோடு விஜய் படம் பண்ண மாட்டார். எனவே இந்த கூட்டணி அமைவது சந்தேகமே. என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பன்முகத் திறமைகள் கொண்ட தமிழ் நடிகர்கள்!.. குறுகிய காலத்தில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்..

google news
Continue Reading

More in Cinema News

To Top