Vijay: விஷால் பிரியாணி மீம்ஸ்.. யோகிபாபுவை நக்கலடித்த விஜய்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க

Published on: January 15, 2026
vishal
---Advertisement---

நாம் எதேச்சையாக செய்யும் ஒரு விஷயம் வைரலாவது என்பது ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் விஷால் பிரியாணி சாப்பிடும் போது அவர் அருகில் இருந்த யோகிபாபுவின் ரியாக்‌ஷன் அழுபவர்களை கூட சிரிக்க வைக்கும். யாருடா இவன்? என்பதை போல் யோகிபாபுவின் ரியாக்‌ஷன் இருந்தது. ஆனால் அதை யோகிபாபு வேண்டுமென்றே செய்யவில்லை. திடீரென விஷால் என்ன செய்கிறார் என ஆச்சரியத்தோடு பார்த்த ஒன்று இந்தளவு வைரலாகும் என அவரே நினைக்கவில்லை.

இதை பற்றி சமீபத்திய ஒரு மேடையில் யோகிபாபு பேசும் போது கூட ‘ஏதோ நான் தேச துரோகம் பண்ண மாதிரி எல்லா மொழிகளிலும் அதை எடுத்து மீம்ஸாக போட ஆரம்பித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளார். இதையெல்லாம் விட விஜய் சார் எனக்கு போன் செய்து ‘டேய் விஷாலே இப்போதான் வளர்ந்து வர்றான். ஒரே ரியாக்‌ஷன்ல எல்லாத்தையும் கெடுத்துட்டீயே’ என்று கூறினாராம்.

நான் வேண்டுமென்றே பண்ணலனா என்று யோகிபாபு சொன்னாலும் ‘இல்ல இல்ல.. நீ என்னனென்ன டைம்ல என்னென்ன பண்ணுவனு உன்னை பத்தி தெரியும்டா’ என்றும் யோகிபாபுவை கலாய்த்திருக்கிறார். அந்தளவுக்கு இந்த பிரியாணி வீடியோ உலகெங்கும் வைரலானது. எல்லாருடைய மொபைலிலும் இந்த வீடியோ இல்லாமல் இருக்காது.

யோகிபாபு இப்போது பிரபுதேவா ஏஆர் ரஹ்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் மூன் வாக் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் 16 கேரக்டரில் இந்தப் படத்தில் யோகிபாபு வருகிறாராம். சினிமாவில் பெரிய ஆளுமையாக இருக்கும் கமல் ஹாசனே இதுவரை 10 கேரக்டர்களில்தான் நடித்துள்ளார். ஆனால் யோகிபாபு இந்த படத்தில் 16 கேரக்டரில் வருவதாக கூறியுள்ளார்.

அதோடு பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வரும் யோகிபாபு சில சமயங்களில் கதையின் நாயகனாகவும் மாறி விடுகிறார். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் ஒரு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு.