
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய தேவரகொண்டாகவும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள். இதையடுத்து பெற்றோர்களும் சம்மதித்தை அடுத்து இருவரும் திருமணம் செய்து முடிவெடுத்தார்கள். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட மாளிகையில் திருமண ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடந்தது.

தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணம் ஒருவழியாக வந்துவிட்டது. பல ஆண்டுகளாகத் தங்களது காதல் விவகாரத்தை “நாங்கள் வெறும் நண்பர்கள் தான்” என்று கூறி மறைத்து வந்த நட்சத்திர ஜோடி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, இன்று (பிப்ரவரி 26) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள லேக் பேலஸில் கரம் பிடித்தனர்.

ராஜஸ்தானின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், விஜய் தேவரகொண்டா சந்தன நிறத்திலான விலையுயர்ந்த ஷெர்வானி அணிந்து கம்பீரமாகத் காட்சியளித்தார். மணமகள் ராஷ்மிகா மந்தனா, தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற லெஹங்கா அணிந்து தேவதை போல் ஜொலித்தார்.

‘கீதா கோவிந்தம்’ படத்தில் தொடங்கிய இவர்களது திரைப் பயணம், இப்போது நிஜ வாழ்க்கையிலும் வெற்றிகரமாகத் தொடங்கியிருப்பது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள் இதோ…

