நடுஇரவில் விஜய் செய்த அந்த சம்பவம்... தளபதி இந்த விஷயத்தில கில்லாடிதான்!..

by Akhilan |
நடுஇரவில் விஜய் செய்த அந்த சம்பவம்... தளபதி இந்த விஷயத்தில கில்லாடிதான்!..
X

நேருக்கு நேர் படம் என்று சொன்னாலே சூர்யாவின் பெயர்தான் நாம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். காரணம் சூர்யா, அந்தப் படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இரண்டு ஹீரோ சப்ஜெக்டான அந்தப் படத்தில் தளபதி விஜய்யும் மிரட்டியிருப்பார்.

நேருக்கு நேர் படத்துக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. 1997-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தைத் தயாரித்தது மணிரத்னம். வசந்த் நேருக்கு நேர் கதையைத் தயார் செய்ததும் முதலில் மனசுக்குள் வரலாமா என்றுதான் டைட்டில் யோசித்திருக்கிறார். அதேபோல், விஜய் - அஜித் இணைந்து நடிக்கும்படி கதையை எழுதியிருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: டிஆர்பியில் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… ஷாக்கான ரசிகர்கள்

ஆசை படத்துக்குப் பிறகு அஜித்தையே இந்தப் படத்துக்குள்ளும் அவர் கொண்டு வந்திருக்கிறார். படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 18 நாட்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அஜித், இதிலிருந்து வெளியேறியிருக்கிறார். இதையடுத்து, அந்த ரோலில் பிரபுதேவா நடிக்க வைக்கலாமா என்றும் யோசித்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு புதுமுக நடிகரை அந்த இடத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த வசந்த், ஆசை படத்தில் நடிக்கக் கேட்ட சிவக்குமாரின் முத்த மகனான சூர்யாவை அணுகியிருக்கிறார். இந்த முறை நீ நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிவக்குமார் சொல்லவே சூர்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதையும் படிங்க: சூரிக்கு இது ஒரு ஆடுகளம்!.. விருது நிச்சயம்!.. கொட்டுக்காளி டிரெய்லர் வீடியோ…

படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பின்னாட்களில் பிரபலமான இயக்குநராக மாறிய கே.வி.ஆனந்த். அதேபோல், இந்தியில் சிம்ரனின் நடிப்பைப் பார்த்த வசந்த், தமிழில் அவரை ஒப்பந்தம் செய்த முதல் படம் இதுதான். நேருக்கு நேர் ஷூட் சமயத்தில் டான்ஸ், ஃபைட் சீக்வென்ஸ்களை மாஸ்டரிடம் கேட்டு ஆர்வமாகக் கற்றுக்கொண்டாராம் விஜய்.

குறிப்பாக கௌசல்யாவுடனான, 'துடிக்கின்ற காதல் தும்மலைப் போல..’ சாங் ஷூட் டைமில் ஸ்பாட்டில் கொரியோகிராஃபர் ராஜூ சுந்தரத்திடம் நடன அசைவுகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டதோடு, இரவு நேரத்தில் அவரின் வீட்டுக்கே போய் டான்ஸ் ஸ்டெப்களை பயிற்சி எடுத்துக் கொண்டாராம் விஜய். அங்கு தொடங்கிய பயணம் விஜயின் டான்ஸுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்ற நிலை உள்ளது.

Next Story