Connect with us

Cinema News

கோட் திரைப்படம் இரண்டாவது முறை தான்… இதுக்கு முன்னரே அந்த படத்திலும் விஜய் இதை செஞ்சிருக்கார்…

GoatMovie: கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் செய்திருக்கும் ஒரு விஷயம் இதற்கு முன்னே அவர் இன்னொரு படத்திலும் செய்திருப்பதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: முதல்ல ரெண்டுனீங்க.. இப்போ மூணா? ‘கோட்’ படம் பற்றி புதிய அப்டேட்! படமுழுக்க விஜய்தானா?

படத்தில் விஎப்எக்ஸ் பணிகளும் பெருவாரியான அளவு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.  விஜய் தன்னுடைய டப்பிங்கை எண்பது சதவீதம் முடித்து விட்டதாகவும், இன்னும் சில தினங்களில் கோட் படத்தை முடித்துவிட்டு தன்னுடைய 69 ஆவது படத்தின் வேலைகளை விஜய் தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் கோட் திரைப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ஆன விஷயங்கள் காத்திருக்கிறது.  மறைந்த முன்னாள் நடிகர், அரசியல்வாதியான கேப்டன் விஜயகாந்த் ஏஐ உதவியுடன் படத்தில் தோன்ற எடுக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களும் இப்படத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ரசிகராக கேப்டன் செய்த தரமான சம்பவம்!.. அவர் அப்பவே அப்படித்தான் போல!..

இது மட்டுமல்லாமல் இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாட இருப்பதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார். இதுதான் முதல்முறையாக விஜய் ஒரு படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருப்பதாக கூறப்பட்டது. முதல் பாடலான விசில் போடு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் இரண்டாவது பாடல் சரியாக அமைய வேண்டும் என்பதில் விஜய் கறார் காட்டி வருகிறாராம்.

ஆனால் இப்படி விஜய் ஒரு படத்தில் இரண்டு பாடல்களை பாடுவது கோட் படத்தில் தான் முதல் முறை அல்ல. இது இரண்டாவது முறைதான். இதற்கு முன்னே அனிருத்  இசையமைப்பில் உருவான கத்தி திரைப்படத்தில் செல்பி புள்ள பாடலுடன், பேட் ஐ என்ற வில்லனின் தீம் பாடலையும் அனிருத்துடன் இணைந்து விஜய் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் இல்லை எனக் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top