தற்போது புதிதாக ரிலீசாகும் திரைப்படங்கள் பெரிதாக ஓடுவதில்லை என்பதால் ஏற்கனவே வெற்றி பெற்ற திரைப்படங்களை ரீ-ரிலீஸ் என்கிற பெயரில் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக விஜயின் படங்கள் அதிக அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வரை வசூல் செய்தது. அதன்பின் சச்சின் உள்ளிட்ட சில படங்கள் ரீ-ரீலீஸ் செய்யப்பட்டது.
பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளிவராத நிலையில் கடந்த வாரமே விஜயின் தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு திட்டமிட்டார். இது விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.
ஆனால் தலைவர் தம்பி தலைமையில், வா வாத்தியார் போன்ற படங்கள் வெளியானதால் போன வாரம் தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
எனவே இந்த வாரம் 23ஆம் தேதி தெறி படம் ரீ-ரிலிஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் திரௌபதி 2 படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஜி மோகன் கலைப்பலு தாணுவுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். எங்களை போன்ற சின்ன படங்களை நிறைய தியேட்டர்களில் ரிலீஸாக நீங்கள் உதவ வேண்டும்.. தெறி ரீ-ரிலீஸை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க அதை ஏற்று புதிய ரிலீஸ் தேதி இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என கலைப்புலி தாணு தற்போது தெரிவித்திருக்கிறார்.

ஜி.மோகனுக்கு அவர் செய்தது ஒரு உதவிதான் என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஏற்கனவே ஜனநாயகன் படமும் வரவில்லை என்ற கோபத்தில் இருக்கிறோம்.. தெறி படத்தையாவது பார்க்கலாம் என்றால் இப்படியே ரீ-ரிலீஸை தள்ளி வைத்தால் எப்படி?’ என அவர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள்.




