Connect with us
jappan

Cinema News

ஜப்பான் படத்தை காலி செய்த விஜய் ஃபேன்ஸ்?!.. இதுக்கு பின்னாடி ஒரு பிளாஷ்பேக் இருக்கு!..

Jappan movie: கார்த்திக்கின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜப்பான். குக்கு, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய ராஜுமூருகன் படம், வித்தியாசமான தலைப்பு என ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு, தீபாவலி ரீலீஸ் என்றாலே அந்த படங்களின் மீது தனி கவனம் இருக்கும்.

இந்த தீபாவளிக்கு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தோடும் ஜப்பான் படமும் வெளியானது. ஆனால், முதல் காட்சிக்கு பின்னரே சமூகவலைத்தளங்களில் இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது.

இதையும் படிங்க: முதன்முதலா பார்த்ததும் படப்பிடிப்பில் உளறிய காமெடி நடிகர் – ‘இடியட்’னு திட்டிய மணிரத்னம்!..

படம் மொக்கையாக இருக்கிறது. செம போர் என பலரும் பதிவிட்டனர். ஒருபக்கம் ஜிகர்தண்டா படம் நன்றாக இருப்பதாக பலரும் பதிவிட சில தியேட்டர்களில் ஜப்பான் படத்தை தூக்கிவிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை போட்டுவிட்டனர். பல தியேட்டர்களில் ஜப்பான் படத்திற்கான காட்சிகளை குறைத்துவிட்டனர்.

இந்நிலையில், ஜப்பான் படத்திற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் நெகட்டிவான கமெண்ட்ஸ்களை பரப்பியது விஜய் ரசிகர்கள்தான் என சொல்லப்படுகிறது. அப்படி என்ன விஜய் ரசிகர்களுக்கு ஜப்பான் படம் மேல் கோபம் என்றால் இதற்கு பின்னணியில் ஒரு பிளாஸ்பேக் இருக்கிறது.

விஜயின் பிகில் படம் வெளியான போதுதான் எஸ்.ஆர்.பிரபு தயாரித்த கைதி படமும் வெளியானது. விஜய் படத்தோடு மோதுகிறீர்களா? என ஒருவர் கேட்க அவர் சொன்ன பதில் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது. ஆனால், லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கவிருந்ததால் அப்போது அமைதியாக இருந்தனர். இப்போது அந்த கோபத்தை காட்டிவிட்டனர். ஏனெனில், ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுதான்.

இதையும் படிங்க: ’தளபதி68’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா..? அடங்கம்மா..! இப்படியா எல்லாம் இறங்குவீங்க!..

மேலும், ஜப்பான் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ‘இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பது உங்கள் கோல்டன் ஸ்டார்’ என வாசகம் போடப்படுகிறது. இது விஜயை கிண்டலடிப்பதாகவும் அவர்கள் எடுத்துக்கொண்டனர். அதனால்தான், சமூகவலைத்தளங்களில் ஜப்பான் படத்தை கிண்டலடித்தும், ட்ரோல் செய்தும் படத்தை காலி செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம், இப்படி சமூகவலைத்தளங்களில் ஒரு படத்திற்கு எதிராக பேசுவதோ, ட்ரோல் செய்வதாலோ மட்டுமே அப்படம் தோல்வி அடைந்துவிடாது. ஜெயிலர் படம் வெளியானபோதும் விஜய் ரசிகர்கள் இப்படித்தான் பதிவிட்டனர். ஆனாலும், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் எல்லா எதிர்ப்பையும், ட்ரோலையும் தாண்டி அப்படம் வெற்றி பெறும் எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிம்பு நடிக்க இருக்கும் கதை இந்த ஸ்டாருக்கு பண்ணியது தான்.. உண்மையை சொன்ன தேசிங்கு பெரியசாமி..!

google news
Continue Reading

More in Cinema News

To Top