கொஞ்ச நேரத்துல கதைய முடிச்சிருப்பாங்க.! விஜய் ரசிகர்களால் நொந்து கொண்ட அரசு அதிகாரிகள்.!
வர வர இந்த தமிழசினிமா ரசிகர்களின் அலுச்சாட்டியம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. தனது ஆதர்சன நாயகனை கொண்டாட வேண்டும் என்பதற்காக இணையத்தில் எது கிடைத்தாலும் அதனை வைத்து அன்றைய ட்ரெண்டிங்காக மாற்றிவிடுகின்றனர்.
அதிலும், இந்த விஜய் அஜித் ரசிகர்கள் சொல்லவே வேண்டாம். அவர்கள் தான் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு முன்னோடி. தனது ஆதர்சன நாயகன் அங்கு இருந்தார். இங்கு வந்தார். படம் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அடுத்த இயக்குனர் இவர் தான் என கடந்து,
தற்போது படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது. எவ்வளவு நேரம் படம் ஓடுகின்றது என பார்க்க தொடங்கிவிட்டனர். படத்தின் சென்சார் சான்று, அது ஒரு மணி நேரங்களை கணக்கிட்டு, படம் விறுவிறுப்பாக இருக்கும். கதை பெருசாக இருக்கும் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என கூற தொடங்கிவிட்டனர்.
இதையும் படியுங்களேன் - காலம் கடந்துபோச்சி இப்போ ரஜினியை ஃபாலோ செஞ்சி என்ன செய்ய போறாரோ இவர்.?!
அப்படித்தான் நேற்று இரவு பீஸ்ட் படத்தின் சென்சார் சான்று இணையத்தில் வெளியானது. பீஸ்ட் சென்சார் அனுப்பப்பட்டது என தகவல் கிடைத்ததும், விஜய் ரசிகர்கள் அரசாங்க சென்சார் இணைய தளத்திற்குள் நுழைந்துவிட்டனர்.
என்ன சான்று எவ்வளவு மணி நேரம் படம் ஓடும் என பார்க்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் அதில் புகுந்ததால், இணைய சர்வர் கொஞ்ச நேரத்தில் ஆட்டம் கண்டுவிட்டதாம். பிறகு கூட்டம் குறைந்து சென்சார் சான்று டிவிட்டரில் வர தொடங்கியதும் சர்வர் மீண்டும் பழைய நிலைக்கு வந்தாக சிலர் குறிப்பிடுகின்றனர்.