அஜித் ஃபேன்ஸை மிஞ்சிய தளபதியன்ஸ்… அதுவா? இதுவா? எதையாது சொல்லுங்களேன்பா… எக்ஸில் ஒரே ரவுசா கிடக்கு!

Published on: September 26, 2023
---Advertisement---

Vijay Fans: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் லியோ படத்தின் ரிலீஸுக்கு படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. ஒருபக்கம் விஜய் ஃபேன்ஸ் படத்தின் ரிலீஸ் இருக்கட்டும். எங்களுக்கு அப்டேட்டை கொடுங்கப்பா என கறார் காட்டி வருகின்றனர்.

விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கும் படம் லியோ. படம் இப்டி இருக்குமா அப்டி இருக்குமா என பலரும் வெயிட்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது ஒரு புது பிரச்னை கிளம்பி இருக்கிறது.

இதையும் படிங்க: அடுத்த பாக்யலட்சுமி , கண்ணம்மாவை ஒரு வழியா தேடிட்டாங்கப்பா! இவர்தான் ‘கதாநாயகி’ நிகழ்ச்சியின் வின்னரா?

படத்தினை இயக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தன்னுடைய எக்ஸ் கணக்கில் 30 நாட்கள் 30 அப்டேட் என லியோ படத்துக்கு ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியானது. ஆனால் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அப்டேட் வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை.

இதனால் விஜய் பேன்ஸ் எக்ஸ் தளத்தில் அப்டேட், அப்டேட் என கத்தி வருகின்றனர். ஒரு பக்கம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்குமா இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் என்ன சத்தமே இல்லாம இருக்கீங்க? ஒருவேலை நடத்த மாட்டாங்களோ என குமுறி வருகின்றனர்.

இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானோ!… விஷால் நல்லது சொன்னாலும் கிழிச்சு தொங்கவிட்டா எப்புடி… என்னப்பா ஆச்சி?

இன்னொரு பக்கம் இரண்டாவது சிங்கிள் எப்போது தான் ரிலீஸ் பண்ணுவீங்க? அதுக்காது அப்டேட் சொல்லுங்க. ஒருவேலை லோகி படங்களில் இருப்பது போல இரண்டாவது பாடல் சுட்சிவேஷன் அடிப்படையில் தான் அமைந்து இருக்குமோ? அப்போ டூயட்டா இருக்காதா? என இன்னொரு பக்கம் சண்டை நடக்கிறது.

இந்த இரண்டு அறிவிப்பில் எதுவும் இல்லாமல் எதுவும் ஒரு போஸ்டரை வெளியிட்டு சீன் போட்டீங்கனா அழுதுறுவோம் என்ற ரீதியில் எக்ஸ் தளமே லியோ ஆடியோ லான்ஞ் ஹேஷ்டேக்கால் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.