அத்தனை அப்டேட் கொடுத்தது உன் கண்ணுக்கு தெரிலல!.. பூட்டி வச்சு பூஜை பண்ணு.. தெறிக்கவிட்ட விஜய் ஃபேன்ஸ்!..
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில், செப்டம்பர் 15-ஆம் தேதி லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் ஆவது வரும் என எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு கடைசிவரை பிம்பிலிக்கா பிலாப்பி காட்டிய தயாரிப்பு நிறுவனத்தை கண்டித்து தற்போது விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகின்றனர்.
#PootiVachuPoojaPannu ஹேஸ்டேக்கை போட்டு லியோ படம் வர இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. நீங்க இன்னமும் புரமோஷனை ஆரம்பிக்க வில்லையே. மற்ற படங்கள் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே புரமோஷனை ஆரம்பித்து பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கமலுக்கு மட்டும் அத்தனை கோடி!.. ரஜினி என்ன தக்காளி தொக்கா?.. ரொம்ப வருத்தம்ப்பா!
ஆரம்பத்தில் விஜயின் லியோ படத்திற்கு அதிரடியாக புரோமோஷன் செய்து வந்த தயாரிப்பாளர் லலித் குமார் கடந்த சில மாதங்களாக கடையை சாத்தி வைத்திருப்பது ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தைவிட அதிக வசூல் வேட்டையை லியோ படம் நடத்தும் என ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுத்து விட்டோம் எப்படியாவது பார்த்து பண்ணுங்க என்கிற ரேஞ்சுக்கு தற்போது விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர்.
இதையும் படிங்க: செஞ்ச தப்புக்காக வாத்தியாரா மாறின சூரி!… அதெப்படி திமிங்கலம் முடியும்…
விஜய் படத்தை ஆரம்பிக்கும் போது இந்த ஆர்வம் தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளருக்கு இல்லாமல் ஏன் போனது என்றும் படத்தின் பட்ஜெட் அதிகரித்து விட்டதா? அல்லது படம் எதிர்பார்த்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லையா? என அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர்களும் சேர்ந்து கொண்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவே நடைபெறாது என பகீர் ஒன்றையும் செய்யாறு பாலு உள்ளிட்டோர் கொளுத்திப் போட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் வராமல் பல மாதங்களாக காத்திருக்கும் அஜித் ரசிகர்களை விட பயங்கர அப்செட் ஆகியுள்ளனர்.