Cinema News
லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.
Leo special show: விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் லியோ. வாரிசு படத்திற்கு விஜய் நடித்துள்ள திரைப்படம் இது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதால் இளசுகளிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், ரசிகர்கள் காணாத ஒரு புதிய உலகை, அனுபவத்தை அவர் கொடுப்பதுதான் அதற்கு காரணம்.
வருகிற 19ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. அதேநேரம் லியோ படம் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகத்தையும், ஏமாற்றத்தையுமே கொடுத்து வருகிறது. முதலில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தார்கள்.
இதையும் படிங்க: உங்க சவகாசமே வேணாம்டா சாமி! இல்லாததுக்கே இவ்ளோ வேலை பாத்துட்டாங்க – ‘லியோ’வால் கடுப்பான ரெட்ஜெயண்ட்
ஏனெனில் விஜய் நேரில் சந்திக்கவும், அவரின் பேச்சை கேட்கவும் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே முடியும். ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி பேசியதற்கு பதிலடியாக விஜய் எதாவது பேசுவார், மேலும் அரசியல் பேசவும் வாய்ப்பிருப்பதாக அவர்கள் நினைத்தனர். ஆனால், அது நடக்கவில்லை. இதுவே அவர்களுக்கு பெரிய ஏமாற்றமே அமைந்தது.
அதேபோல், பொதுவாக விஜய் படம் வெளியாகும்போது அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு காட்சியை திரையிடுவார்கள். இந்த முறை அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. சரி 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், காலை 11 மணிக்குதான் முதல் காட்சி ஒளிபரப்ப வேண்டும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவு விஜய் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரின் இந்த பாட்டில் இருந்து தான் ’நா ரெடி’ பாட்டை சுட்டார்… அனிருத்தின் தில்லாங்கடியை மாட்டி விட்ட லோகேஷ்..!
ஒருபக்கம், சிறப்பு காட்சி இல்லையென்றால் பரவாயில்லை. படம் வெளியாவதற்கு முதல் நாள் அதாவது 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என 2 காட்சியை ஒளிபரப்ப வேண்டும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதில், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று கல்லா கட்டவும் திட்டமிட்டார்கள்.
ஆனால், வெளிநாட்டில் அந்த நேரத்தில் ப்ரீமியர் ஷோ வெளியாகும் என்பதால் இங்கேயும் அப்படி வெளியிட முடியாது என லலித்குமார் மறுத்துவிட்டாராம். இதுவும் விஜய் ரசிகர்கள் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தத்தில் லியோ படம் 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.
கடைசி நேரத்தில் இதில் ஏதேனும் மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!..
இதையும் படிங்க: நடிச்சா ஹீரோனு இருந்தவரை வில்லனாக்கிட்டாங்களே!.. தளபதி 68-ல் நடந்த செம டிவிஸ்ட்!…