டேய் எனக்கே ஒன்னும் புரியலை… கோட் படத்துக்கு விஜய் சொன்ன முதல் கமெண்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
TheGoat: கோட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி விட்டதால் இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வரும் நிலையில் அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டிகள் சொல்லி இருக்கும் தகவல்கள் சுவாரசியமாக மாறி இருக்கிறது.
விஜய், சினேகா, பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். திரைப்படத்தில் முதல் முறையாக மைக் மோகன் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: என்கிட்ட அப்படி சொன்னாரு!.. அதனால விஜய பார்க்க போகவே இல்ல!.. ராதாரவி கோபம்!..
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. முதலில் இப்படம் டைம் டிராவல் படமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த ஒரு அறிகுறியும் ட்ரைலரில் இடம் பெறவில்லை. எனினும், வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்று டிரைலரை பார்த்த யாரும் படத்தின் கதையை சரியாக இன்னும் கணிக்கவில்லை.
அதில் நான் குறியீடு கொடுத்தும் யாராலும் அதை சொல்ல முடியவில்லை, இதனால் படத்தின் திரைக்கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அடுத்தடுத்த சீன்களை யாராலும் கணிக்க முடியாத அளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டை வாங்கி முன்பே தன்னை தயாரித்துக் கொண்டு விஜய் ஷூட்டிங்கே வந்தார்.
ஷூட்டிங் சமயத்தில் ஒரு காட்சியை மாற்றினால் கூட உடனடியாக இதை நடிக்க முடியாது. என்னை சிறிது தயாரித்துக் கொள்ள வேண்டும் என கூறிவிடுவார். அந்த வகையில் தன்னுடைய கடைசி சில படங்களுக்காக விஜய் முழு ஒத்துழைப்பை கொடுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கோட் படம் ஓடிடியில் இப்படிதான் வெளியாகும்… சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு
படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதையை முதலில் விஜயிடம் இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன போது, ரொம்பவே குழப்பத்தை ஏற்படுத்தியதாம். இந்த கதை ரொம்பவே சிக்கலானதாக தோன்றுகிறது. ஒன்னும் புரியல. எனக்கே புரியலனா யாருக்கும் புரியாதுடா எனக் கூறி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்தே வெங்கட் பிரபு கதையை எல்லா தரப்பினருக்கும் புரியும் வகையில் எளிதான முறையில் மாற்றி அமைத்திருக்கிறார். அந்த கதை தான் தற்போது திரைப்படமாக உருவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.