Categories: latest news

நீங்க மட்டும் தான் காப்பி அடிப்பீங்களா? ரஜினி ஸ்டைலில் தளபதி69ஐ தயாரிக்க போவது யார் தெரியுமா?

Thalapathy69: விஜய் தன்னுடைய கோட் படத்தினை முடித்து கொண்டு அடுத்த படத்தின் இயக்குனரை ஓகே செய்துவிட்டார். தற்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்த ஆச்சரிய அறிவிப்பும் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அரசியலில் எண்ட்ரி ஆக இருப்பதால் விஜய் 2 வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக செய்திகள் வந்தது. அதற்கேற்ப விஜயும் தன்னுடைய அடுத்த பட இயக்குனரை ஓகே செய்யாமலே இருந்தார். இதனால் கோட் படத்துடன் கோலிவுட்டில் இருந்து விஜய் சற்றுக்காலம் தள்ளியே இருப்பார் எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க: மௌனம் கலைத்த தளபதி!.. அரசியல் அறிவிப்பு எப்போ தெரியுமா?!.. லீக் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்..

2026 தேர்தலில் வெல்ல முடியவில்லை என்றாலும் ரசிகர்களிடம் தன்னுடைய கட்சியை சரியாக சேர்த்துவிட வேண்டும். இந்த முடிவில் விஜய் இருப்பதாகவும் அதற்கு நிறைய சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதேவேளையில் இன்னும் 2 வருடம் இருக்கும் நிலையில் விஜய்  கண்டிப்பாக தன்னுடைய இயக்குனரையாவது தேர்வு செய்து விடுவார் எனவும் தகவல்கள் தெரிவித்தது.

தற்போது அந்த கிசுகிசுக்களை உண்மையாக்கும் பொருட்டு விஜய் தன்னுடைய அடுத்த இயக்குனரை ஓகே செய்துவிட்டார். கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தான் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிக்கு பின்னர் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

அதுவும் இல்லாமல் தளபதி69 படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஏற்கனவே காமெடி ஜானரில் கில்லாடி என்பதால் கார்த்திக் சுப்புராஜ், விஜய் கூட்டணி வொர்ட் அவுட் ஆகும் என்கின்றது கோலிவுட் வட்டாரம். விஜய் இயக்குனர்களை ரஜினி பாலோ செய்து வந்த நிலையில், இது அடுத்த ட்விஸ்ட்டாகி இருக்கிறது. 

தலைவர்171 படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்த் இறந்த இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் நடந்தது இதுதான்!… ரகசியத்தினை உடைத்த பிரேமலதா…

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago