அந்த விஷயத்தில் கேப்டனை ஃபாலோ பண்ணும் விஜய்… அட இப்படி மாறிட்டாரா என்ன தளபதி?!...

by amutha raja |   ( Updated:2024-01-13 23:33:49  )
vijay
X

Vijay: தமிழ் சினிமாவில் தனது மாஸ் நடிப்பினால் மக்களை தனதுவசம் கட்டிபோட்டவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படம் என்றாலே வசூலிலும் முதல் இடத்தை பிடிக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனது நடிப்பினால் கோலிவுட்டில் முக்கியமான இடத்தை தக்கவைத்துள்ளார்.

இவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் தனது பல்வேறு வேடங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இவரின் சினிமா வளர்ச்சிக்கு மிக பெரிய அளவில் உதவியுள்ளார்.

இதையும் வாசிங்க:எல்லாரும் நடிக்குறாங்க… ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டனோட கால் தூசி!.. வெடிக்கும் மீசை ராஜேந்திரன்…

ஆனால் என்னதான் விஜய் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் இவரது திரைப்படங்கள் பெரிதளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பின்னர் கேப்டன் விஜயகாந்திடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டு கொண்டதால் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருந்தார்.

என்னதான் கேப்டன் அந்த நேரத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் விஜய்யின் சினிமா வாழ்க்கைக்காக விஜய்யையே அப்படத்தில் முன்னணிபடுத்தி காட்டியிருந்தார். அந்த அளவுக்கு விஜயகாந்த் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருந்தார். சமீபத்தில் விஜயகாந்த் மறைவிற்கு விஜய் வந்திருந்தபோது ரசிகர்கள் விஜய் மீது சற்று கோபத்துடன் நடந்து கொண்டனர்.

இதையும் வாசிங்க:நான் தோத்து போனதுக்கு காரணமே அந்த நடிகர்தான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சித்தப்பு சரவணன்..

பொதுவாக விஜய் மேடைகளிலோ சரி தனிப்பட்ட முறையிலோ மிகவும் கோபப்படக்கூடியவர். ஆனால் விஜயகாந்த் இறப்பிற்கு வந்தபோது விஜய்க்கு ஏற்பட்ட அந்த நிலைமைக்கு விஜய் எந்தவித கோபமும் படவில்லை. மாறாக விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் விஜயகாந்தின் பாதையையே தானும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டதாக பல கருத்துகளும் உலாவுகின்றன.

vijay

அதற்கான வெளிப்பாடாகதான் சமீபத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் கொடுத்ததாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் தற்போது மக்களுடனான தனது உறவை நிலைப்படுத்தவே சமீபத்தில் பல வித செல்பிகளை தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் எனவும் வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிங்க:என்னை ஏத்துக்கோ பாபு!… கெஞ்சிய மனைவி.. மனம் இறங்காத சந்திரபாபு!… திருமண வாழ்வில் நடந்த திருப்பம்..

Next Story