Vijay: தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு தடபுடல் விருந்து... அசத்தும் விஜய்!

by sankaran v |   ( Updated:2024-11-23 03:56:24  )
vijay
X

vijay

விஜய் அக்டோபர் 27ல் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் வெற்றிகரமாக நடத்தினார். மாநாட்டுக்காக விவசாயிகள் நிலம் வழங்கி இருந்தனர். அவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு இன்று பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தடபுடல் விருந்து நடந்தது.

முதல் மாநில மாநாட்டிற்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து அளிக்க பனையூர் தலைமை அலுவலகத்துக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்.

Also read: தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணமே நயன்தாரா தான்… பகீர் கிளப்பும் பிரபலம்..!

காலை 8 மணிக்கே பேருந்து மற்றும் கார்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வந்தனர். கைபேசி, ஸ்மார்ட் வாட்ச்களை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. காலையில் பொங்கல், இட்லி, வடை கொடுத்தார்கள்.

ஏற்கனவே அவர்களைக் கவுரவிக்கும் விதமாக பசு மற்றும் கன்றுகளை தவெக சார்பில் வழங்கி இருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்டோர் வந்து இருந்தனர். அவர்கள் கையில் பூங்கொத்துடன் வந்துள்ளதைப் பார்க்க முடிந்தது. கல்விக்காக பரிசு வழங்கிய விழாவில் நடந்தது போல விருந்து வழங்கப்பட உள்ளது.

vijay

vijay

விஜய் உடன் இணைந்து விவசாயிகள் புகைப்படமும் எடுக்க இருக்கிறார்கள். விஜய் நீலாங்கரை இல்லத்தில் இருந்து கட்சி அலுவலகத்திற்குப் புறப்பட்டார். மதிய உணவை சைவ விருந்து விஜய் விவசாயிகளுக்குப் பரிமாற உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயை வரவேற்றார்.

Also read: டைட்டில் தொடங்கி படத்தின் ரிலீஸ் வரை!.. சூர்யா 44-க்கு சுடச்சுட அப்டேட் கொடுத்த கார்த்தி சுப்புராஜ்!…

விஜய் கட்சி அலுவலகத்துக்கு உள்ளே செல்கிறார். அங்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை. விவசாயிகளுடன் கலந்துரையாடலும் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கட்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கான மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு விருந்து அளிப்பது முக்கியமான நிகழ்வாகும். மாவட்ட நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story