வியாபாரம் இல்லைங்க! ‘கோட்’ பட ஆடியோ லாஞ்சில் இப்படி ஒரு பிரச்சினையா?

by Rohini |   ( Updated:2024-05-11 10:50:33  )
goat
X

goat

Vijay Goat: விஜயின் ஒவ்வொரு பட பூஜையின் போதும் சரி படப்பிடிப்பின் போதும் சரி படம் முடிவடையும் போதும் சரி அந்த படத்தை பற்றிய ஏதாவது ஒரு அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கும். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். தற்போது விஜய் கோட் படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். நேற்று கூட அவர் கோட் படத்திற்காக சென்னையிலிருந்து துபாய் புறப்பட்டு சென்ற வீடியோ இன்று சோசியல் மீடியாவில் வைரலானது.

கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்ப்பது கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியாவில் நடக்கப் போகிறதா அல்லது வெளிநாட்டில் நடக்கப் போகிறதா என்ற ஒரு விவாதம் படக்குழுவினரிடையே ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: இளையராஜாவுடன் சண்டை!. வாய்ப்பில்லாமல் ஈ ஓட்டிய வைரமுத்து!.. கடவுள் மாதிரி வந்த வாய்ப்பு!…

ஏற்கனவே லியோ படத்திலும் இதே மாதிரியான ஒரு பிரச்சனை தான் இருந்து வந்தது. அதுவும் இப்போது அரசியலில் ஆர்வமாக இருப்பதால் ஒருவேளை இந்த கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைத்து அரசியல் மாநாட்டையும் வைத்து விடலாமா என்ற ஒரு திட்டத்திலும் விஜய் இருப்பாரா என்ற வகையில் பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

ஆனால் விஜய் சினிமா வேறு அரசியல் வேறு என்றுதான் பார்ப்பார் என்ற ஒரு கருத்தும் இருந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்பார்த்த அளவு வியாபாரம் கோட் படத்தில் இதுவரை நடக்கவில்லை என்பதுதான் வருத்தம். அதனால் வெளிநாடுகளில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைத்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து விடலாம் என்ற ஐடியாவில் படக்குழு இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜிக்கு பிறகு மோகனாலதான் அது செய்ய முடியும்! பாக்யராஜ் சொன்ன சூப்பரான தகவல்

அதுவும் மலேசியாவில் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் திட்டத்தில் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனால் கண்டிப்பாக கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியாவில் இருக்காது என்று தெரிகிறது. இது விஜயின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story