இதுதான் ஆயிரம் கோடி வசூல் பண்ணுமா?!. சும்மா இருங்கடா!.. விபி-யை வச்சி செய்யும் ஃபேன்ஸ்!

by சிவா |
இதுதான் ஆயிரம் கோடி வசூல் பண்ணுமா?!. சும்மா இருங்கடா!.. விபி-யை வச்சி செய்யும் ஃபேன்ஸ்!
X

#image_title

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் பட ரிலீசுக்கு முன்பே அப்படம் இத்தனை கோடி வசூல் செய்யும் என அடித்துவிடுவார்கள். அப்படத்தில் வேலை செய்த சிலர் அல்லது படத்தின் தயாரிப்பாளரே ஊடகங்களுக்கு அப்படி பேட்டி கொடுப்பார். அப்படி சொல்லிவிட்டால் போதும்.

சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?.. அவர்களும் சமூகவலைத்தளங்களில் அதையே சொல்வர்கள். அதன்பின் படம் வெளியாகிவிட்டால் முதல் நாள் 100 கோடி வசூலை தாண்டிவிட்டது என அடித்துவிடுவர்கள். 2 நாளில் 2 கோடி, 3 நாளில் 300 கோடியை தாண்டிவிட்டது என சொல்வார்கள்.

இதையும் படிங்க: பேமெண்ட் வரலையா…கோட் படத்தை கண்டப்படி துப்பி வச்சிருக்காரே… பாண்டா பிரசாந்த்

அதை ஒரு கூட்டமும் நம்பும். ஆனால், அதில் உண்மையே இருக்காது. ஏனெனில், உண்மையிலே படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு மட்டுமே தெரியும். படம் ஹிட் என்றாலும் கூட படம் வெளியாகி 2 வாரங்கள் கழித்து உண்மையான வசூல் என்ன? எவ்வளவு லாபம் என்பது தயாரிப்பாளருக்கே தெரியவரும். ஆனால், இது எதுவுமே தெரியாமல் படம் 500 கோடி வசூல், 750 கோடி வசூல் என சொல்வார்கள்.

விஜயின் நடிப்பில் கோட் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவே ஊடகம் ஒன்றில் சொல்லியிருக்கிறார். மேலும், விஜய் படங்களுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: இவ்ளோ கஷ்டப்பட்டும் ரசிகர்களுக்கு பிடிக்காம போயிடுச்சே!.. கோட்-டில் கோட்டைவிட்ட வி.பி!..

ஒருபக்கம், விஜய் இன்னொரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்பதால் கண்டிப்பாக பலரும் இப்படத்தை பார்க்க ஆசைப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, கோட் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை பெறும் என விஜய் ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் சொல்ல துவங்கினார்கள்.

ஆனால், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படத்தில் பெரிதாக கதையென ஒன்றுமில்லை. விஜயை வெங்கட்பிரபு சரியாக பயன்படுத்தவில்லை. இண்டெர்வெல் பிளாக் மற்றும் படத்தின் கடைசி 20 நிமிடம் மட்டுமே நன்றாக இருக்கிறது. படத்தில் விஜயை இளமையாக காட்டியிருப்பது ஒட்டவில்லை. மங்காத்தா அஜித் போல விஜயை நெகட்டிவாக காட்ட நினைத்திருக்கிறார்கள். ஆனால், கிளிக் ஆகவில்லை. யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இல்லை. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் என பலரும் சொல்கிறார்கள். இதை வைத்து பார்க்கும்போது கோட் திரைப்படம் ஆயிரம் கோடியெல்லாம் வசூல் செய்யாது என்றே கணிக்கப்படுகிறது.

ஆயிரம் கோடிக்கு ஆப்பு வச்சிட்டாரே வெங்கட்பிரபு!...

இதையும் படிங்க: ஒன்னு கூடிட்டாய்ங்ப்பா!. குடும்பத்துடன் கோட் படம் பார்த்த விஜய்?!.. ஆச்சர்ய தகவல்!…

Next Story