Connect with us
vijay

Cinema News

கல்யாண வீடா, இழவு வீடா? விஜய்க்குத் தெரியாதா? ஏன் இப்படி செஞ்சாரு? பொங்கும் பிரபலம்

விஜய் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுத்தது சர்ச்சையாகி உள்ளது. டி.பி.சத்திரம் என்ற இடத்தில் இருந்து அவர்களை கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

Also read: விஜய்க்கு எதிரா மறைமுகமா கேம் ஆடும் ரஜினி… இதெல்லாம் அவருடைய ஸ்ட்ரேஜிதானா?

பாதிக்கப்பட்ட இடத்துக்குப் போகணும். அங்கு போய் நிவாரணம் கொடுக்கணும். விஜய் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கி இருக்காரு. பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரா போகணும். அங்கு போய் என்ன வெள்ளம் இருக்கு? எப்படி பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு கேட்கணும். அங்கு போய் நிவாரணம் கொடுக்குறது தான் முறை.

அரசியல் முதிர்ச்சி இன்மை

25 கிலோமீட்டர்ல இருந்து வேன் வச்சி அழைச்சிட்டு வந்து கட்சி அலுவலகத்துக்கு வந்து நிவாரணம் கொடுக்குறதுங்கறது அவரோட அரசியல் முதிர்ச்சி இன்மையைக் காட்டுது, விஜயகாந்த் மாதிரி ஒரு பிரச்சனைன்னா வேட்டிய மடிச்சிக்கட்டிக்கிட்டு இறங்கி வேலை செய்வாரு. அந்த அளவுக்குப் போக வேண்டாம்.

vijay

vijay

கல்யாண வீடா, இழவு வீடா?

கல்யாணத்துக்கு இன்விட்டேஷன் கொடுக்குறீங்க. எல்லாரும் உங்களைத் தேடி மண்டபத்துக்கு வருவாங்க. ஒரு இழவு வீட்டுக்குப் போகும்போது நீங்க தான் அவங்களைப் போய் பார்க்கணும். அவங்களை வந்து எங்க வீட்டுக்கு வாங்க. எப்படி இறந்து போனாருன்னு கேட்டுக்குறது, அப்படியா, இப்படியாங்றது சரியான விஷயம் கிடையாது.

இதுதான் நியாயமான விஷயம். பயர் ஆக்சிடண்ட்ல ஆஸ்பத்திரியில இருந்தாங்கன்னா அங்க போய் பார்க்கணும். அதை விட்டுட்டு அவர் குணமடைஞ்சி வந்ததுக்கு அப்புறமோ, இறந்துட்டாருன்னா வீட்டுக்கு வந்தோ பார்த்து நிவாரணம் கொடுத்து என்ன பிரயோஜனம்?

துணைமுதல்வர்

முதல்ல அரசியல்னா களத்துல இறங்கி போராடணும். துணைமுதல்வர் களத்துல இறங்கி போறாரு. நைட்ல கூட புரொட்டோகால் எல்லாம் மீறி போய் பார்க்குறாரு. மக்களை சந்திக்காரு. அவங்க தான் அரசியல்ல நிலைச்சி நிற்க முடியும்.

பன்னீர் – சாக்கடை

அவங்க தான் வெற்றி பெற முடியும். விஜய் என்னைக்காவது சாக்கடைக்குள்ள இறங்கிருக்காரா? பன்னீர் குளிக்கிறவருக்கு சாக்கடைன்னா என்னன்னு தெரியணும். அப்போ தான் அரசியல்ல ஜெயிக்க முடியும் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

balaji prabhu

balaji prabhu

விஜய் தரப்பு இதுக்கு என்ன சொல்றாங்கன்னா களத்துல போய் பார்த்தா பாதிக்கப்பட்டவங்க கூட ரொம்ப நேரமா பேச முடியாது. ஆனா கட்சி அலுவலகத்துக்கு வந்தா ஒரு மணி நேரம் பேசலாம். அதனால தான் இங்கே வரவழைச்சிருக்கோம்னு சொல்றாங்கன்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவிடம் சொன்னதற்கு இப்படி ஒரு பதில் சொல்கிறார் அவர்.

ஆறுதல் சொல்றது

டிபி சத்திரம்கற இடத்துல இருந்து 300 பேரை மட்டும் கூப்பிட்டு அவங்களுக்கு ஆறுதல் சொல்றது நல்லாருக்குமா? ஒரு மணி நேரம் வேணாலும் பேசுங்க. ஆனா களத்துல பாதிக்கப்பட்ட இடத்துக்குப் போனா அங்கே ஒரு பத்தாயிரம் பேர் கூடுவாங்க.

அவங்ககிட்ட 10 நிமிஷம் பேசுங்க. உங்களுக்கு எந்த பிரச்சனைனாலும் நான் இருக்கேன்னு சொல்லுங்க. அதுதான் அவங்களுக்கு பெரிய ஆறுதலா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top