More
Categories: Cinema News latest news

செட்டை கூட வித்து காசாக்கிய லலித்… கணக்கு செமையா இருக்கே! அசந்த விஜயின் திடீர் முடிவு!

தமிழ் சினிமாவின் வியாபாரம் கோடிக்கணக்கினை தாண்டி இருக்கும் நிலையில் யூஸ் செய்த செட்களை எல்லாம் தூர வீசும் சிலருக்கு இடையில் அதை சரியான முறையில் காசாக்கிய லியோ தயாரிப்பாளரை கண்டு விஜயே ஷாக்காகி இருக்கிறார்.

விஜயின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. படத்தின் ரிலீஸை குறி வைத்து படக்குழு வேகமாக உழைத்து வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: லியோவ விடுங்க தளபதி68 அப்டேட் சொல்லுங்க… யுவன் கொளுத்தி விட்ட தீ.. என்ன ஸ்பீடுப்பா!

இப்படம் ரிலீஸுக்கு முன்னரே 450 கோடி வசூலை குவித்து இருக்கிறது. இதனால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் போன்ற வில்லன்களின் மாஸ் கதாபாத்திரங்களும் லியோவிற்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. 

இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் தான் விஜயின் தளபதி69 ஐ தற்போது தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு காசை சரியாக கையாண்ட அவர் திறமையால் தான் விஜயே மெய்சிலர்த்து போய் அவர் கையில் இந்த வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க : அப்பாவுக்கே இயக்குனராகும் மகன்.. 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி…

ஒரு சினிமாவின் படத்துக்கு தேவையான காட்சிகள் சில நேரங்களில் செட் போடுவார்கள். அந்த காட்சி முடிந்ததும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் செட் பிரிக்கும் குழுவிடம் அதைகொடுத்து விட்டு ஒரு தொகை வாங்கி விடுவார்களாம். ஆனால் இதை லலித் வேறு வகையில் கையாண்டு இருக்கிறார்.

அதாவது, விநியோகிஸ்தர்கள் கூட்டம் நடைபெற்ற போது வயதான அழுக்கு சட்டை போட்ட ஒருவர் அவர் அலுவலகம் வந்து இருக்கிறார். இவர்களை விட்டு அவரிடம் தனியை சில நிமிடங்கள் பேசி இருக்கிறார். என்னெவென விசாரித்த போது நான் ரெடியா பாடலுக்கு போட்ட செட்டை பிரிக்க வந்த குழு 2 லட்சம் தான் கொடுப்பதாக சொன்னார்கள்.

மேலும் ஆள் கூலி, வண்டி வாடகை என தலையில் கட்ட பார்த்தனர். உடனே சுதாரித்த லலித், அவர்களிடம் வேண்டாம் எனக் கூறி விட்டு காய்லான் கடை ஆளை அழைத்து இதை விற்க சொல்லி இருக்கிறார். அவர் இவருக்கு 6 லட்ச ரூபாய் வரை கொடுத்தாராம். ஆத்தாடி எவ்வளவோ மிச்சம்!

Published by
Akhilan