கோட் படத்துக்கு அனுமதி வரும்னு பார்த்தா கட்சிக்கு வந்துவிட்டதே ஆப்பு!
தளபதி விஜய் தனது 68வது படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தைப் பற்றி தினமும் அப்டேட்டுகள் வந்து கொண்டுள்ளன. படத்தின் ரிலீஸ் இன்னும் ஒரு சிலநாள்களே உள்ளன என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. சினிமா, அரசியல் என இரட்டைக்குதிரைகளில் தற்போது விஜய் சவாரி செய்து வருகிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தியா என விஜயே கேட்கும் அளவிற்கு ஒரு செய்தி வந்துள்ளது. என்னன்னு பார்ப்போம்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 23ம் தேதி விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டியில் வி.சாலை என்ற இடத்தில் நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டு இருந்தார். இதற்காக கடந்த 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
இந்த மாநாட்டை 85 ஏக்கர்ல நடத்தப் போறோம். பார்க்கிங் 3 இடத்தில் ஒதுக்கி இருக்கிறோம். பந்தலுக்கு அனுமதி வழங்கணும்னு கேட்டு இருந்தார். தற்போது விக்கிரவாண்டி காவல்துறை உதவி ஆய்வாளர் காத்த முத்து புஸ்ஸி ஆனந்திடம் 21 கேள்விகள் அடங்கிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதுல மாநாடு நடத்தும் நேரம், கலந்து கொள்வது யார்? மாநாடு உள், வெளி வழி, எத்தனை வாகனங்கள் வரும்? யார் சரி செய்வார்? என்ன ஏற்பாடு? என்ன வகை உணவு வழங்கப் போகிறீர்கள் உள்ளிட்ட 21 கேள்விகள் கேட்டுள்ளார். இது 3 பக்கங்கள் உள்ளது.
இதற்கு விளக்கம் அளிக்கும்பட்சத்தில் மாநாடுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இதற்கு காலை 9 மணி காட்சிக்குத் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Also read: கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா? ஒரு வெறியோடதான் இருக்காரு
அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. அது வரும்னு பார்த்தா கட்சி மாநாட்டுக்கே ஆப்பு வைக்கிறாங்களே... அடுத்த கட்டமாக தளபதியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.