விஜயகாந்தை பார்க்க அனுமதி கேட்டாரா விஜய்?.. சண்டைக்கு நிற்கும் இருதரப்பு!... உண்மை என்ன தெரியுமா?

by Akhilan |
விஜயகாந்தை பார்க்க அனுமதி கேட்டாரா விஜய்?.. சண்டைக்கு நிற்கும் இருதரப்பு!... உண்மை என்ன தெரியுமா?
X

Vijay vs Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு வந்த விஜய் மீது செருப்பை வீசி துரோகி என முழக்கமிட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பிரச்னை குறித்து தற்போது மேலும் சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

விஜயை வளர்த்து விட்டது கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் தான். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது விஜய நேராக பார்க்கவே இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அப்போ விஜய் தரப்பில் இருந்து வந்த தகவலின்படி நாங்க அவரை பார்க்க நேரம் கேட்டோம்.

இதையும் படிங்க: புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

ஆனால் எங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவே இல்லை என்றனர். தற்போது விஜயகாந்தின் மேனேஜர் என ஒருவர் அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்தை பார்க்க விஜய் அனுமதி கேட்கவே இல்லை எனக் கூறி இருந்தார். விஜயகாந்த் 10 வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு மேனேஜரா?

சரி விஜய் தரப்பு சொன்னதை பார்ப்பதற்கு முன்னர், எஸ்.ஏ.சி விஜயகாந்துக்கு கொடுத்த இரங்கல் பதிவில் கூட விஜியை பார்க்க இரண்டு வருடமாக கேட்டு வருகிறேன். எனக்கு அனுமதியே தரப்படவில்லை என்றார். விஜய்காந்தின் நெருங்கிய நண்பர்களான ராதாரவி, வாகை சந்திரசேகர் கூட இதை சொல்லி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: அயலானுக்கு பேட்டி வேணுமா? அப்போ இந்த கண்டிஷன் கன்பார்ம்.. சிவகார்த்திகேயனின் தில்லாலங்கடி!

அப்படி பார்க்கும் போது விஜய் தரப்பு சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இப்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் எனத் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்னை ஒருபுறமிருக்க மற்ற நடிகர்களை போல இல்லாமல் அவர் நேராக வந்தார். வந்து தன்னுடைய அஞ்சலியை செலுத்தியவருக்கு இப்படி ஒரு அவமரியாதை செய்தது நியாயமா?

நடிகர் சங்கம் செய்யும் இரங்கல் நிகழ்வுக்கு விஜய் இதனால் வருவது சிக்கல் ஆகுமா என பல கேள்விகள் எழுந்து இருக்கிறது. ஆனாலும் கூட விஜயின் கோட் ஷூட்டிங் இந்த மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது. அதனால் விஜயகாந்தின் இரங்கல் நிகழ்வில் கண்டிப்பாக விஜய் பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story