மகனின் பட பூஜைக்கு கூட போகாத விஜய்!.. அப்படி என்னதாம்பா பஞ்சாயத்து?!..
Jason sanjay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் அவரை தளபதி என அழைக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறியிருக்கிறார். இவர் நடிக்கும் படம் என்றாலே இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.
அந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை விஜய் உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான லியோ படமும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையேதான் உருவானது. இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அப்பவே சொன்ன விஜய்!. ஆர்வக்கோளாறில் கேட்காத லோகேஷ் கனகராஜ்!. இப்ப ஃபீல் பண்ணி என்ன பன்றது!..
ஒருபக்கம் விஜய் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரியான உறவில் இல்லை என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. விஜயின் மனைவி சங்கீதா மற்றும் அவரின் குழந்தைகள் எல்லோரும் லண்டனில் வசித்து வருகிறார்கள். விஜய் சென்னையில் தனியாக வசித்து வருகிறார்.
அதோடு, விஜயின் மகன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுப்பதாக வெளிவந்த செய்தி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதோடு, அதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், சஞ்சய் லைக்கா நிறுவனத்தை சந்தித்து கதை சொல்லியே இந்த வாய்ப்பை பெற்றார் எனவும், அப்பா விஜயுடன் அவர் பேசுவதே இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் முதலில் திருமணம் செய்ய இருந்தது இந்த பிரபலத்தின் மகளையா? லண்டன் பொண்ணு சும்மா விடுமா என்ன?
இதை நிரூபிக்கும் விதமாக நேற்று சென்னையில் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடந்துள்ளது. இதிலும் விஜய் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காக்கில் இருந்ததால் விஜய் இதில் கலந்துகொள்ள முடியாமல் போனதா? இல்லை வேறு காரணமா என்பது தெரியவில்லை.
மொத்தத்தில், விஜய் - சஞ்சய் இடையேயான உறவு மற்றும் சஞ்சய் இயக்கவுள்ள புதிய படம் தொடர்பான செய்திகள் என அனைத்துமேமர்மாகவே இருந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பேசினால் மட்டுமே விஜய் - சஞ்சய் உறவு தொடர்பான உண்மை என்பது வெளியே தெரிய வரும்.
இதையும் படிங்க: தீபாவளி முடிந்தும் கெத்து காட்டும் விஜய்… லியோவுக்கு அடிச்ச லக்!.. திடீரென நடந்த டிவிஸ்ட்!..