கோட் ரிலீஸாக இருக்கு… திடீரென மகாராஷ்ட்ரா ஜூட் விட்ட விஜய்.. என்ன சேதி?

by Akhilan |
கோட் ரிலீஸாக இருக்கு… திடீரென மகாராஷ்ட்ரா ஜூட் விட்ட விஜய்.. என்ன சேதி?
X

#image_title

Goat: நடிகர் விஜய் திடீரென மகாராஷ்டிரா பயணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை விஜய் விமான நிலையத்தில் இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்த கோட்… 3 மணி நேரம் போறதே தெரியாதாம்..!

அது குறித்து விசாரிக்கும் போது, தவெக கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து தனியார் விமானத்தில் விஜய் மகாராஷ்டிராவிற்கு பயணம் செய்திருக்கிறார். சீரடி சாய்பாபா கோயிலுக்கு சிறப்பு தரிசனம் மேற்கொள்ள தான் இந்த பயணம் எனக் கூறப்படுகிறது.

விரைவில் அவரின் கோட் திரைப்படம் ரிலீஸ் இருக்கு காத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் அவரின் முதல் கட்சி மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இது சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வழிபாடு எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூலி கிளைமேக்ஸில் இப்படிதான் வடை சுடுவார் லோகேஷ்!.. பங்கம் செய்த புளூசட்ட மாறன்!…

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் விஜய்யின் சினிமா கேரியரில் முக்கிய படமாக இருக்கப்பட வேண்டும் என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் விஷயங்கள் இருப்பதாகவும், ஸ்பெஷல் கேமியோ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story