கதையையே மாற்றிய உறியடி விஜய் குமார்!.. கிரேட் எஸ்கேப் ஆன அயோத்தி பட இயக்குனர்..

உறியடி திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜய் குமார். அதன்பின் உறியடி 2 படத்தையும் இயக்கி நடித்தார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர். இப்போது அப்பாஸ் என்பவரின் இயக்கத்தில் ‘ஃபைட் கிளப்’ என்கிற படத்தில் நடித்து சமீபத்தில் இப்படம் வெளியானது.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் மிகவும் உருக்கமாகவும் பேசினார் விஜய்குமார். இப்போது படம் வெளியாகி ஓரளவுக்கு வசூலையும் பெற்று வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்டும் இருக்கிறார். அதேநேரம், விஜய் குமார் மீது திரையுலகில் ஒரு புகார் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: போட்ட காசை எடுப்பாரா லோகேஷ் கனகராஜ்?.. உறியடி விஜய் குமார் நடிப்பு எப்படி? ஃபைட் கிளப் விமர்சனம்!
ஃபைட் கிளப் படத்திற்கு முன்னால் ஒரு இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் குமார் நடித்திருக்கிறார். ஆனால், அவரே ஒரு கதாசிரியர் மற்றும் இயக்குனர் என்பதால் எல்லாவற்றிலும் தலையிட்டாராம். இதனால், அந்த இயக்குனர் கடுப்பானாலும், பாதி படம் முடிந்துவிட்டதால் வேறுவழியின்றி படத்தை ஒருவழியாக எடுத்து முடித்தாராம்.
அதைவிட முக்கியமாக, சசிக்குமார் நடிப்பில் வெளிவந்து பாராட்டை பெற்ற அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த விஜய் குமார்தான். இந்த படம் உருவாகும்போது கதை விவாதத்தில் அமர்ந்த விஜய்குமார் கதையில் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மொத்த கதையையும் மாற்றிவிட்டாரம்.
இதையும் படிங்க: என்ன ஆச்சு பாலாவுக்கு.. இப்போ தானே அவ்வளவோ உதவி செஞ்சாரு.. வைரலாகும் புகைப்படம்.!
இதில் அலார்ட் ஆன அப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி வேறு தயாரிப்பாளரிடம் சென்று அயோத்தி பட கதையை சொல்லி சசிக்குமாரை நடிக்க வைத்து படத்தை முடித்துள்ளார். மந்திர மூர்த்திக்கு சம்மதம் சொன்ன அந்த முதல் தயாரிப்பாளரிடம் விஜய்குமார் பேசி அவரை தள்ளிக்கொண்டு போய்விட்டார்.
அப்படி உருவான ஃபைட் கிளப் படம்தான் இப்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படி போகும் இடமெல்லாம் கதைகளில் தலையிடும் வேலையை விஜய் குமார் வைத்திருந்தால் சினிமாவில் அவரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என சொல்லமுடியாது என சினிமா பத்திரிக்கையாளர்கள் பேச துவங்கிவிட்டனர்.
இதையும் படிங்க: சைலைண்டா நடக்கும் வேலை!. பாகுபலி ரேஞ்சுக்கு உருவாகும் சிம்பு படம்!. சம்பவம் உறுதி..