விஜயின் அரசியல் எண்ட்ரி!.. கறார் கண்டிஷன் போட்ட தளபதி!. வெங்கட் பிரபுவுக்கு வந்த நெருக்கடி!
Actor vijay: விஜய் இப்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். பொதுவாக ஒரு படம் முடிந்து கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் விஜய் தனது அடுத்த படத்தை முடிவு செய்வார். ஏற்கனவே முடிவு செய்துவிட்டாலும் படப்பிடிப்புக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வு எடுப்பார்.
ஆனால், லியோ படம் வெளியாகி 2 மாதத்திலேயே கோட் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கினாலும் இலங்கை, சவுத் ஆப்பிரிக்கா, பேங்காங், தாய்லாந்து என பல நாடுகளிலும் நடக்கவுள்ளது.
இதையும் படிங்க: கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..
இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், விஜயின் அரசியல் எண்ட்ரியும் சூடு பிடித்து வருகிறது. எந்த நேரமும் அவரின் அரசியல் கட்சி தொடர்பான செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பெயரை பிப்ரவரி முதல் வாரம் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யலாம் என முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
மேலும், தமிழக முன்னேற்ற கழகம் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் லீக் ஆனது. இது உண்மையா என்பது தெரியவில்லை. விஜய் வருகிற பாராளுமன்ற தேர்தலிலேயே தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை போட்டியிட வைப்பது என்கிற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
எனவே, அரசியல் பணிகள் இருப்பதால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடு என வெங்கட்பிரபுவிடம் சொல்லிவிட்டாராம் விஜய். எனவே, வெங்கட்பிரபு வேகமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இலங்கை சென்ற அவர் அங்கு படத்தின் இறுதிக்காட்சியை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
இப்போது ஒரு பாடல்காட்சியை அவர் படம் பிடித்து வருவதாகவும் அதற்கு பிரபுதேவா நடனம் அமைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: 33 வருஷம் கழிச்சு ரி எண்ட்ரி ஆகும் செண்பகம்! அப்ப விட்டத இப்ப பிடிப்பேன்! விஜய், அஜித் எல்லாம் ரெடியா இருங்க