Categories: latest news

Vijay: விஜயின் மாஸ் ஹிட் படத்தை ஜஸ்ட் மிஸ்ஸில் விட்ட சூர்யா… எல்லாம் தம்பியால் வந்த வினை!..

Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தை முதலில் மறுத்துவிட்ட பின்னர் அதை ஒப்புக்கொண்டார். ஆனால் நடிகர் சூர்யா அந்த வாய்ப்பை தன்னுடைய தம்பியால் இழந்துள்ள ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஆரம்பக்கால போராட்டம்: கோலிவுட்டில் தந்தையால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் விஜய். முதலில் எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய இயக்கத்தில் தொடர்ச்சியாக விஜயை வைத்து இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்பாக தளபதிக்கு அமையவில்லை.

இதையும்  படிங்க: Amaran: ரஜினி படத்தையே ஓவர்டேக் பண்ண அமரன்?!… 10 நாளில் எகிறிய எஸ்கே-வின் மார்க்கெட்!…

இருந்தும் தன்னுடைய மகனை பெரிய இடத்தில் அமர வைக்க பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்தவர் எஸ் ஏ சி. தொடர்ச்சியான போராட்டத்திற்கு பின்னர் நடிகர் விஜய்க்கு கோலிவுட்டில் பல வாய்ப்புகள் புதிய தொடங்கியது. அதை பிடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருந்தார்.

நண்பன்: தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து வந்த விஜய் ஒரு கட்டத்தில் ரீமேக் படங்களில் நடிக்கவும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்படங்கள் விஜயின் கேரியரில் மிகப்பெரிய உச்சத்தை அவருக்கு கொடுத்தது என்பதுதான் உண்மை. அப்படி ஒரு படமாக தான் நண்பன் திரைப்படமும் அமைந்தது.

இதையும்  படிங்க: Sivakarthikeyan: எஸ்கே மனைவியின் காதலனை வில்லனாக களமிறக்கும் SK25 படக்குழு… உங்களுக்கு மனசாட்சி இல்லையாப்பா?

ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த 3 இடியட்ஸ். இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் சங்கர் இயக்க இருந்தார். படத்தில் நடிகர் விஜய் நடிக்க முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால் இன்னொரு படத்தின் லுக் டெஸ்டுக்காக நடந்த ஹேர் கட்டினால் திடீரென நண்பன் திரைப்படத்திலிருந்து விலக வேண்டிய நிலை உருவானது.

நண்பனில் சூர்யா: இதைத் தொடர்ந்து நண்பன் திரைப்பட குழு விஜய் கேரக்டருக்கு பல முக்கிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் யாரும் அந்த நேரத்தில் ஒப்பந்தம் ஆகாத நிலையில் படப்பிடிப்பை ஜீவா மற்றும் ஸ்ரீகாந்தை வைத்து தொடங்கிவிட்டனர்.

அந்த நேரத்தில் நடிகர் சூர்யா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தன்னுடைய தம்பி கார்த்திக்கை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததால் அவருக்கும் மறுப்பு தெரிவித்தனராம். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் நண்பன் திரைப்படத்தில் இணைந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கும் இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago