கேப் விடாம அடிச்சா எப்புடி… வாயவே திறக்கவிட கூடாது… வெங்கட் பிரபுவை லாக் செய்த தளபதி!

by Akhilan |
கேப் விடாம அடிச்சா எப்புடி… வாயவே திறக்கவிட கூடாது… வெங்கட் பிரபுவை லாக் செய்த தளபதி!
X

Thalapathy68: வெங்கட் பிரபுவை விட்டால் கதையே மொத்தமாக அப்டேட் என்ற பெயரில் சொல்லியே விடுவார் என்ற பயத்தில் தான் விஜய் அவசர அவசரமாக சென்னை வந்து இருக்கிறார். இந்நிலையில் இன்னும் சில முக்கிய தகவல்களும் தளபதி68 குறித்து வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தினை முடித்த கையோடு விஜய் புக் செய்த இயக்குனர் தான் வெங்கட் பிரபு. அவர் சொன்ன கதை ரொம்பவே பிடித்துவிட உடனே அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியது. இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார்.

இதையும் படிங்க : இப்படி ஆகணும்னு நினைச்சேன்.. வடிவேலு கூட சேர்ந்து தப்பு பண்ணிட்டேன்!… புலம்பும் காமெடி நடிகர்…

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பு செய்யும் இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். முக்கியமாக பிரசாந்த், விஜயிற்கு ஒரு ஜோடியாக சினேகா என ஆச்சரிய கூட்டணியில் பலரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் அரசியலில் பிஸியாக போவதால் இந்த படத்திற்கு 30 நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்து இருக்கிறார். அதற்குள் 68 படத்தின் தன்னுடைய போர்ஷனை முடித்து விடும்படியும் தெரிவித்து இருக்கிறாராம். இதனால் படத்தினை தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த படமாவது ஹிட் அடிக்குமா?.. மேடையில் கண் கலங்கிய சித்தார்த்!.. என்ன சொன்னார் தெரியுமா?,,

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பீஸ்ட், லியோவை தாண்டி தற்போது தளபதி68 படத்துக்கு அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டரையே புக் செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் இப்படத்திற்கான நான்கு பாடல்களின் ட்யூனை யுவன் ஷங்கர் ராஜா தயார் செய்து விட்டதாகவும் விரைவில் அதுவும் தயாராகி விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மியூசிக் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதால் அதிலும் அதிக கவனம் செலுத்தும்படி விஜய் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story