போதுமப்பா விட்ருங்க.. சீக்கிரம் கோட் படத்தினை கழட்டிவிட போகும் தளபதி விஜய்… அடுத்த ப்ளான் என்ன தெரியுமா?

Goat Movie: விஜய் தன்னுடைய கோட் திரைப்படத்தில் தொடர்ச்சியாக பணிபுரிந்து வந்த நிலையில் அடுத்த கட்ட முடிவுகள் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை எடுத்து விஜயின் பிளான் குறித்தும் முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்தவரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். படம் தொடங்கியபோதே இது சயின்ஸ் பிக்சன் திரைப்படம் தான் எனக் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கு முன்னரே விஜய் வெங்கட் பிரபு இணைந்த முக்கிய குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..
அங்கு விஜயின் இளமை காலத்தை ஆண்டி ஏஜிங் மூலம் வடிவமைக்க முடிவு செய்திருந்தனர். இது மட்டும் அல்லாமல் இப்படத்தில் நிறைய விஎக்ஸ்எஸ் காட்சிகள் இருப்பதால் செப்டம்பருக்கு முன் அதை முடிக்க பட குழு தீவிரமாக உழைத்து வருகிறது. கடந்த வாரம் அர்ச்சனா கல்பாத்தி மணிகள் தொடங்கி விட்டதாக அறிவித்திருந்தார். ஹாலிவுட்டின் பிரபல திரைப்படங்களுக்கு செய்த நிறுவனம் தான் கோட் திரைப்படத்திற்கும் பணிபுரிந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு அதற்கான வேலைகள் முடிந்து விட்டதாகவும் அறிவுத்திருந்தார். இந்த பணிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்த விஜய் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். ஏற்கனவே கோட் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை 50% விஜய் முடித்து விட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில் விரைவில் மொத்த டப்பிங் பணியையும் விஜய் முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.
இதையும் படிங்க: இதனால் தான் திடீரென வெளியானது குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக்… செம ஐடியா தான்!