யார் வந்தால் ஏன்ன.?! விஜய் வராதது தான் பெரிய குறை.! காரணம் இதுதான்.!
நேற்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சினிமா பட தயாரிப்பாளர், பிரபல பைனான்சியர் அன்பு செழியன் வீட்டு இல்ல திருமண விழாவில் தான் இருந்தனர். ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரம் முதல், கலைப்புலி எஸ். தாணு, போனி கபூர் என முன்னனி தயாரிப்பாளர்கள் வரை பலர் வந்திருந்தனர்.
இவர்கள், இத்தனை பேர் வந்திருந்தாலும், தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் வராதது அன்பு செழியனுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டதாம். அன்பு செழியன் நேரில் விஜய் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து வெகு நேரம் பேசிக்கொண்டு தான் வந்தாராம்.
இதையும் படியுங்களேன் - காத்திருந்த தியேட்டர் ஓனர்கள்.! தெறித்து ஓடிய மாஸ்டர் தயாரிப்பாளர்.! பகீர் பின்னணியில் உதயநிதி.!
அப்போதெல்லாம் வருகிறேன் என்பது போல கூறிவிட்டு கடைசியில் வராமல் விட்டுவிட்டார் விஜய் என வருத்தப்பட்டாராம் அன்பு செழியன்.
அன்றைய தினம் கிட்டத்தட்ட சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர். உண்மையில், அங்கு விஜய் வந்திருந்தால் கூட்டம் இன்னும் கட்டுக்கடங்காமல் இருந்திருக்கும் . இதனை எதிர்பார்த்து தான் விஜய் விழாவிற்கு வருவதை தவிர்த்துவிட்டார் என கூறப்படுகிறது.