Cinema News
விஜய் கிட்ட வேணாம்னு சொன்னேன் கேக்கல படம் அட்டர் பிளாப்.! ரகசியம் உடைத்த பிரபலம்.!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நல்ல கதைகளை ஏற்று கொள்வார்கள். அதே போல பெரிய நட்சத்திரங்களாக வளர்ந்துவிட்டால் அவர்களுக்கு என ஒரு வரையறை வைத்து விடுவர். அப்படி இருந்தால் மட்டுமே ஏற்று கொள்வார்கள்.
அப்டி தான் எம்ஜிஆர் அழுதால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சிவாஜி அழுதால் ஏற்றுக்கொள்வார்கள். ரஜினியை ஆரம்பத்தில் வில்லனாக ஏற்றுக்கொண்டாலும், சினிமாவில் எம்,ஜி.ஆருக்கு பின்னர் பார்க்கப்பட்டதால் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. அவரும் நடிக்க வில்லை. கமல் நெகடீவ் கதாபாத்திரம் செய்தால் ஏற்றுக்கொள்வார்.
அதே போல தான் விஜய் வில்லன் கதாபாத்திரம் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவே அஜித் மங்காத்தா போன்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயம் பற்றி அண்மையில் சினிமா பைனான்சியர், விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில்,
இதையும் படியுங்களேன் – ஜி.வி.பிரகாஷிற்கு அடித்தது பாலிவுட் ஜாக்பாட்.! இனி சின்ராச கையில் புடிக்க முடியாதே.!
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அப்போது விஜய் வளர்ந்து வரும் ஹீரோ, அந்த சமயம் தான் ப்ரியமுடன் எனும் திரைப்படம் வெளியானதாம். அதில் விஜய் கடைசியில் இறந்துவிடுவது போல காட்டப்பட்டிருக்கும். இதனை பிரிவியூ காட்சியில் பார்த்த சுப்பிரமணியம், விஜயை ரசிகர்கள் இப்படிஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
விஜய் எம்.ஜி.ஆர் போல மக்கள் பார்க்கின்றனர். அதனால் அவர் நெகட்டிவ் கதாபாத்திரம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றேன் . அதே போல அந்த படம் சரியாக போகவில்லை. அதற்கடுத்து, அழகிய தமிழ் மகன் எனும் படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்தார் அதுவும் சரியாக போகவில்லை என வெளிப்படையாக தெரிவித்தார்.