கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

Published on: February 1, 2024
vijay
---Advertisement---

நடிகர் விஜய் தனது அரசியல் நடவடிக்கையை பல வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டர். அவரின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றும் வேலைகளும் எப்போது நடந்துவிட்டது. கடந்த சில வருடங்களாகவே தமிழகமெங்கும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகி்களை நேரில் அழைத்து பேசி வருகிறார் விஜய்.

ஆனால், இதுவரை கட்சி தொடங்கவில்லை. கட்சி பெயரையும் அவர் அறிவிக்கவில்லை. விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகும் போது ஆளும்கட்சி குடுத்த குடைச்சலில் 2 நாட்கள் படம் வெளியாகவில்லை. இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேரும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்க காத்திருக்கும் நயன்!… 90ஸ் பிரபல ஹிட் படத்தில் நடிக்க போறாராம்… வாய் சும்மா இருக்குமா?

சர்கார் படம் வந்தபோது அப்படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தால் இதுபோல ஒரு பிரச்சனை ஏற்பட்டு சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் படத்தின் பேனர்களை அப்போது ஆளும் கட்சியாக இருந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கிழித்து எறிந்தனர். அதேபோல், ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்திற்காக வருமானத்துறை அதிகாரிகள் மாஸ்டர் படத்திற்காக நெய்வேலியில் இருந்த விஜயை காரிலேயே அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

vijay

அதோடு தமிழகத்தில் இப்போது ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இல்லை. எனவே, சரியான நேரத்தில் களமிறங்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். அதோடு, அவருக்கும் அந்த முதலமைச்சர் இருக்கையில் அமரும் ஆசையும் இருக்கிறது. சமீபத்தில் பனையூரில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயரை பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார். எனவே, அப்போது கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட முழு விபரங்கள் தெரியவரும்.

ஒருபக்கம் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் விஜய் ஆலோசனை செய்து வருகிறார். முடிவில் கட்சி பெயரில் ஒரு மொபைல் செயலியை உருவாக்கலாம் என முடிவெடுத்துள்ளனராம். எனவே, விஜயின் கட்சியில் இணைய விரும்புவர்கள் அந்த செயலியை டவுண்ட்லோட் செய்து தங்களின் விபரங்களை கொடுத்து தங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: விடாமுயற்சி ஃபர்ஸ்ட்லுக் வரது விஜய் கையில் இருக்கு!.. அஜித் போடும் ஸ்கெட்ச்!.. சிக்குவாரா தளபதி!.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.