அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமய மலைக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கே உள்ள சட்லஜ் ஆற்றில் விழுந்து அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது உடலை சில நாட்கள் தீவிரமாக தேடி மீட்புப் படையினர் கடைசியாக மீட்ட நிலையில், நேற்று வெற்றி துரைசாமியின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வெற்றி துரைசாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: லவ் அண்ட் லவ் ஒன்லி!.. காதலர் தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்த படங்கள்.. எல்லாமே தரம்!
நடிகர் அஜித் காலையிலேயே வெற்றி துரைசாமியின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நடிகை ஷாலினி மாலை வரை வெற்றி துரைசாமி வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார் என தகவல்கள் வெளியாகின.
அஜித் மற்றும் வெற்றி துரைசாமி இருவருமே டிராவல் பிரியர்கள் என்பதால், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்ல நட்பு நிலவி வந்த நிலையில், வெற்றியின் மறைவுக்கு நடிகர் அஜித் நேரடியாக சென்று ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: சமத்தா சோபாவுல!.. சமந்தா என்ன பண்றாரு பாருங்க.. இப்போ எல்லாம் அந்த வேலையை இவரே பார்க்குறாரா?..
நடிகர் விஜய் சூட்டிங் முடித்து விட்டு வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், விஜய் அங்கே செல்லாமல் திரும்பி விட்டதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய்க்கு பதிலாக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அங்கே சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விஜயகாந்த் உடலுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் போது ஓவர் கூட்ட நெரிசல் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அங்கே சென்று அஞ்சலி செலுத்தி வந்தார் விஜய். ஆனால், அவர் மீது செருப்பு வீசி அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக கூட்ட நெரிசலை அவர் தவிர்த்து விட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…