கெஞ்சிய தளபதி முரண்டு பிடித்த பிரபுதேவா… இந்த காட்சியின் பின்னணி தெரியுமா?

Published on: September 23, 2022
தளபதி
---Advertisement---

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய். பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் பிரபுதேவாவிடம் ஒரு விஷயத்திற்கு கெஞ்சிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழுலகிற்கு வந்தவர் நடிகர் விஜய். இவர் தந்தை மிகப்பெரிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தனது மகனுக்கு நிலையான இடம் கிடைக்க அதிகமான படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் விஜயிற்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர் நெகடிவ் விமர்சனங்களே குவிந்தன.

தளபதி

பூவே உனக்காக படம் தான் விஜயின் முதல் ஹிட் படமாகும். இப்படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியால் விஜயிற்கு கோலிவுட் நட்சத்திர அந்தஸ்த்தை கொடுத்தது. நமக்கு ஆக்‌ஷனை விட காதல் படம் தான் பெஸ்ட் என உணர்ந்தவர். தொடர்ந்து பல காதல் படங்களில் நடிக்க துவங்கினார். இதில் முக்கியமானது காதலுக்கு மரியாதை மற்றும் லவ் டுடே படங்கள் தான். இதே பாணியில் பல படங்களில் நடித்து வெற்றி நட்சத்திரமாக மாறினார்.

இவர் பகவதி படம் மூலம் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார். அந்த பார்முலாவும் விஜயிற்கு சரியாக ஓர்க்காகியது. இதை சரியாக புரிந்து கொண்டவர். ஒரு காலம் வரை இரண்டு ரூட்டையும் சரியாக மேனேஜ் செய்து வந்தார். அப்பொழுது அவர் நடித்த படம் தான் போக்கிரி.

நடன மாஸ்டர் பிரபுதேவா இயக்கிய முதல் படம். அசின் நாயகியாக நடித்திருந்தார். படம் மாஸ் காட்சிகளுடன் செம அப்ளாஸ் அள்ளியது. இப்படத்தின் இண்ட்ரோ பாடலில் ஒரு காட்சியில் பிரபுதேவாவுடன் விஜய் ஆடி இருப்பார். ஆடுங்கடா என்ன சுத்தி என துவங்கும் பாடலுக்கு இன்று பேன் பேஸ் இருக்கின்றனர்.

தளபதி

இந்நிலையில், அந்த காட்சி பிரபுதேவாவின் ஐடியா இல்லையாம். விஜய் தான் தனக்கு மாஸ்டருடன் ஒரு காட்சியில் நடித்து விட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்திருக்கிறார். நடிகர் வையாபுரியிடம் தான் இதை செய்து தரும்படி கேட்டு இருக்கிறார். அவர் இயக்குனரான பிரபுதேவாவிடம் கேட்க அவர் போங்கப்பா என்னால முடியாது என்று ஒரே நோ என்று முடித்து விட்டார். ஆனால், வையாபுரியும், ஸ்ரீமனும் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆடைகளை எல்லாம் தைக்க சொல்லிவிட்டனர்.

இதையும் படிங்க: 7 வருடம் கழித்து விஜய்க்கு சரியான பதிலடி கொடுத்த அஜித்… தோல்வியை ஒப்புக்கொள்ளாத தளபதி.?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.