டேய் நீ எப்படி ரியாக்‌ஷன் கொடுப்பேன்னு தெரியும்!.. யோகிபாபுவை கலாய்த்த விஜய்!.

Published on: January 15, 2026
yogibabu vishal
---Advertisement---

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. கவுண்டமணி சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருப்பதாலும் சந்தானம், சூரி ஆகியோர் ஹீரோவாக நடிக்கப் போய் விட்டதாலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகருக்கான பஞ்சம் நிலவுகிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட யோகி பாபு பல படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற நிலை தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் விஷாலுடன் ஒரு படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். அந்த படம் தொடர்பான ஒரு விழாவில் விஷால் சாப்பிடுவதற்கு முன்பு கடவுளை கும்பிடுவது போல சில விஷயங்களை செய்தார். அப்போது அவரின் அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த யோகிபாபு நக்கலாக சில ரியாக்ஷன்களை கொடுத்தார். அதை யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அந்த வீடியோ உலகமெங்கும் வைரலாகிவிட்டது.

‘நான் வேண்டுமென்றே அப்படி ரியாக்‌ஷன் கொடுக்கவில்லை. சும்மாதான் பண்ணேன்’ என யோகி பாபு என்னென்னவோ சொல்லி சமாளித்து பார்த்தார். ஆனால், யாரும் அதை நம்பவில்லை. இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றில் பேசிய யோகிபாபு ‘விஷால் சார் வீடியோவை பார்த்துவிட்டு விஜய் அண்ணன் எனக்கு போன் பண்ணாரு..

‘ஏன்டா அந்த மனுசனே இப்பதான் மேலே வந்திருக்கார். நீ ஒரு ரியாக்சன் கொடுத்து காலி பண்ணிட்டியேன்னு கேட்டாரு. ‘இல்லண்ணே சும்மாதான் பண்ணேன்’ என நான் சொல்ல ‘டேய் டேய்.. உன்ன பத்தி எனக்கு தெரியும்.. நீ எந்த விஷயத்துக்கு எப்படி நீ ரியாக்‌ஷன் கொடுப்பேன்னு தெரியும்’ அப்படின்னு சொன்னாரு’ என கூறியிருக்கிறார்.