ஷாருக்கானுக்கே விபூதி அடித்த விஜய்!.. குறுக்கே வந்த கெளசிக் கமல்ஹாசன்!.. என்ன ஆகப் போகுதோ?..

0
786

கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை காப்பி அடித்து தான் அட்லீ மெர்சல் படத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் கமல்ஹாசனை சந்தித்து ஆசி வாங்க அட்லீ நினைத்த போது, அதன் பேக்ரவுண்டில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை கமல் இடம்பெறச் செய்திருந்தார்.

அப்படி அட்லீயை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன் தற்போது அட்லீ இயக்கத்திலேயே நடிக்க போவதாக பதற வைக்கும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: ரெட் கார்ட் கொடுத்தது தப்பு தான்… ப்ரதீப் ஆண்டனிக்கு பெத்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி..! கெத்து மேன் கெத்து…

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி சினிமா மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அந்த படமே மெளன ராகம் படத்தின் காப்பி என கூறப்பட்டது.

அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் படிங்க: திருமணத்தில் தப்பா போன ஃபிராங்க்!.. தலைமறைவான சிவகார்த்திகேயன்!.. அப்பவே அவர் அப்படித்தான்!..

ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்திய நிலையில், மீண்டும் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் பண்ணுவது உறுதியாகி உள்ளது.

மேலும், அந்த படத்தில் முதலில் விஜய் இணைந்து நடிக்கப் போவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அரசியலில் அவர் இறங்க வாய்ப்பிருப்பதால் அட்லீ ஷாருக்கான் படத்தில் நடிக்க மாட்டார் என தெரிகிறதாம். அதன் காரணமாக அந்த படத்தில் விஜய்க்கு பதிலாக கமல்ஹாசனை நடிக்க வைக்கும் முயற்சியில் அட்லீ ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

google news