ஃபில்ட்டர் பண்ணி அனுப்புறார் போல! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் வாழ்த்தை அனுப்பிய விஜய்.. யாருக்குனு பாருங்க

vijay
Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருகிறார். தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக அவருடைய 69வது படத்தில் இணைய இருக்கிறார். அதற்கான தயாரிப்பு நிறுவனம் யார் என்பதில் ஆலோசித்து வருகிறார்கள். இந்த இரு படங்களுக்கு பிறகு விஜய் நேரடியாக அரசியலில் களம் இறங்க இருக்கிறார். முழுவதுமாக சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முழு மூச்சாக அரசியலில் இறங்குகிறார்,
இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பவன் கல்யாணுக்கும் தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவுக்கும் முதல் ஆளாக தனது வாழ்த்தை தெரிவித்தார் விஜய். ஆனால் தமிழ் நாட்டில் வெற்றிபெற்ற திமுக கட்சிக்கோ அல்லது நாம் தமிழர் கட்சிக்கோ என யாருக்குமே வாழ்த்தை தெரிவிக்க வில்லை.
இது இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியிருந்தது, இந்த நிலையில் இன்று திடீரென விஜய் தனது வாழ்த்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தெரிவித்திருக்கிறார், அதில் 'நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த வாழ்த்தை பார்த்த பல பேர் வெறும் வாழ்த்தை சொல்லி கட்சியை நடத்த முடியாது தளபதி. பொது வெளியில் வந்து பேச முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில பேர் அண்ணா வாழ்த்து சொல்றதை தாண்டி ஏதாவது அரசியல் பேசுங்கண்ணா என்றும் கூறி வருகிறார்கள்.

vijay
மேலும் தேர்தல் அப்ப மட்டும் வந்து ஓட்டு கேட்டா ஜெயிக்க முடியாது. அறிக்கை விட்டு மட்டும் எவ்வளவு நாள் கட்சியை நடத்திக் கொண்டிருப்பீர்கள்? தமிழக வெற்றிக் கழகம் ஒரு லெட்டர் பேடு கட்சியா என்றும் பல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதனால்தான் தளபதி இறங்கி வந்து பேச பயப்படுகிறார் போல என்றும் சில பேர் கிண்டலடித்து வருகின்றனர்.