அடேய் விட்ருங்கப்பா… விஜய் சேதுபதியை விடாமல் துரத்தும் வில்லன் ரோல்… இந்தமுறையும் மாஸ் ஹீரோவா?

Published on: February 8, 2024
---Advertisement---

Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் உச்சத்தில் ஹீரோவாக இருந்த விஜய் சேதுபதி திடீரென வில்லன் ரோலை கையில் எடுத்தார். தற்போது அதில் கூட ஒரு டுவிஸ்ட் நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

சின்ன சின்ன வேடம் மூலம் உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக ஒரே வருடத்தில் 5 படங்கள் வரை நடித்து வந்தார். இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தும் மாஸ் காட்டினார்.

இதையும் படிங்க: ஏங்க இது பாலிவுட் படம் போலங்க… கங்குவா படத்தின் மீது எழுந்த சர்ச்சை… ஆரம்பத்திலே ஆட்டத்த ஆரம்பிச்சிட்டாங்களே…

திடீரென வில்லன் அவதாரம் எடுத்து கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தினர். முதல் படமே ஹிட் கொடுக்க ஹீரோ மொத்தமாக வில்லனாக மாறினார்.

ரஜினியின் பேட்ட திரைப்படம் முதல் விக்ரம் படத்தில் கமலுக்கு வரை வில்லனாக நடித்தார். கோலிவுட் தாண்டி பாலிவுட் சென்றும் வில்லனாக ஜவான் படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து இனி வில்லனாக நடிக்க போவதில்லை என அறிவித்தார். பெரிய நடிகர்களுக்காக நிறைய இறங்கி போக வேண்டி இருப்பதால் இந்த முடிவு என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: சிக்கலில் தவித்த சிவாஜி படத்திற்கு தானாக முன்வந்து உதவிய பிரபலம்!.. அதுக்கான காரணம் தெரியுமா?..

இந்நிலையில் இந்த முடிவில் இருந்து திடீர் மாற்றம் செய்து இருக்கிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகமும் உடனடியாக உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகுமார் – அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாக இருக்கும் புஷ்பா 3ல் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க பல கோடிகள் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

புஷ்பா2 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இப்படம் இந்த வருட தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் இடையேயான சண்டை காட்சிகள் கூட படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்கின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.