ராமராஜனை ஃபாலோ செய்யும் விஜய் சேதுபதி.! கிழே விழுந்தும் மனுஷன் திருந்தலையே.!

Published on: February 15, 2022
vijay sethupathi
---Advertisement---

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்வதை விட வந்தவருக்கு எல்லாம் கால்ஷீட் அல்லி அல்லி தரும் விஜய் சேதுபதி என பழமொழியை மாற்றிவிடலாம் எனும் அளவிற்கு யார் கேட்டாலும் கால்ஷீட் கொடுக்கிறாராம் விஜய் சேதுபதி.

தமிழில் நடிக்கிறார். ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளில் நடிக்கிறார். ஏதேனும் முக்கிய ஹீரோ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் நடிக்கிறார். அவரது படங்கள் வரிசைகட்டி களமிறங்குகின்றன. ஏப்ரல் 28இல் அவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்களேன் – ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்தின் புகைப்படம்.! என்ன இப்படி ஆகிட்டார்.?!

அதே நாளில், கமல் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அந்தளவுக்கு பிசியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.

அவரை தேடி வரும் தயாரிப்பாளர்கள் புதியவர், பணம் இருக்கிறதா என்றெல்லாம் பார்பதில்லையாம். ஓகே சொல்லி விடுகிறார். ஆனால் கால்ஷீட் கொடுத்துவிடுகிறார் ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. அது எப்போ ஃப்ரீயாக இருக்கிறதோ அப்போது வந்து நடித்து கொடுகின்றேன் என சொல்லிவிடுகிறாராம்.

80’s காலகட்டங்களில் ராமராஜன் இவ்வாறு தான் செய்வாராம். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் இல்லை என்று கூறாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து விடுவாராம். தேதி எப்போது ஃப்ரீயாக இருக்கிறதோ அப்போது கொடுத்து விடலாம் என கூறிவிடுவாராம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment