விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் புதிய படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? சத்தமே இல்லாமல் நடந்து முடிஞ்ச பூஜை
Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் வெகு விரைவாக கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவ்வளவு குறுகிய நாள்களில் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை தன் நடிப்பின் மூலம் ஏற்படுத்தியவர் நம் மக்கள் செல்வன்.
தோழனோடு தோழனாக ரசிகர்களோடு ரசிகராக அனைவரிடமும் சரி சமமாக சகஜமாக பழகக் கூடிய ஒரு அற்புதமான கலைஞன் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக நடித்து அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: நான் திருடனா?!.. என் மகனுக்கு என்ன பதில் சொல்றது?!. சிவக்குமாருக்கு அமீர் அனுப்பிய மேசேஜ்!..
முதல் படமே ஒரு காவியமாக அமைந்தது விஜய்சேதுபதிக்கு. அதனை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதி திடீரென வில்லன் அவதாரம் எடுத்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம் போன்ற கோலிவுட்டின் கிங்கான ரஜினி, கமல், விஜய்க்கு வில்லனாக நடித்தார்.
ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இந்த படங்களில் வில்லனாக நடித்து மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கினார். அதன் விளைவு பாலிவுட் கிங்காங் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: ஒரு குருவை அசிங்கமா பேசுன போது ரசிச்ச சிஷ்யன் கார்த்தியா தான் இருக்கும்… கார்த்தி என்ன சிவாஜியா? நடிகர் அதிரடி..!
இப்படியே வில்லனாகவே நடித்தால் ரசிகர்கள் தன்னை வில்லனாகத்தான் பார்ப்பார்கள் என்று அவ்வப்போது ஹீரோவாக ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் இன்று விஜய்சேதுபதி - மிஷ்கின் இணையும் ஒரு புதிய படத்திற்கான பூஜை மிக எளிதாக நடைபெற்றிருக்கிறது.
ஏற்கனவே மிஷ்கினிடம் ஆரம்பத்தில் பட வாய்ப்பு தேடி வந்தவர்தான் விஜய்சேதுபதி. ஆனால் அவர் நடிப்பு சரியில்லை என விரட்டி விட்டவர் மிஷ்கின். ஆனால் இப்போது விஜய் சேதுபதிக்காக காத்திருந்து இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டு விட்டது. இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கு ‘ட்ரையின்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்