Connect with us
VJS

Cinema News

தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… இந்த நிலைமைல இதெல்லாம் சரியா? பிரபலம் கேள்வி

மகாராஜா படம் தமிழ்சினிமா உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து வெற்றியையேப் பார்க்காத தமிழ்சினிமா இப்போது படம் நல்லாருக்குன்னு எல்லாரையும் சொல்ல வைத்து விட்டது. எல்லா பெருமைகளும் இந்தப் படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனையேச் சாரும்.

விஜய் சேதுபதிக்கும் இது முற்றிலும் மாறுபட்ட கேரக்டர் தான். ஒரு மெல்லிய சோகத்தை எப்போதும் சுமந்தபடி படம் முழுவதும் வலம் வருவார். தன்னோட கேரக்டருக்கு எப்போதும் அவரது படங்களில் அதிகமாக வசனம் இருக்காது. அந்த வகையில் இந்தப் படத்திலும் அவரது வசனம் முழுவதையும் எழுதினாலே ஒரு ஏ4 சீட்டுக்குள் அடக்கிவிடலாம் என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. இதுகுறித்து மேலும் அவர் என்னென்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க… அவ்வை சண்முகி படத்துக்கு கமல் அவ்ளோ கஷ்டப்பட்டாரா…? இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!

ஒரு படத்தின் வெற்றிக்கு கதை பாதி தான் முக்கியம். ஒரு படத்தோட வெற்றிக்கு திரைக்கதை தான் முக்கிய காரணம். அதுக்கு பெரிய உதாரணம் குஷி படம். ஆரம்பக்காட்சியே 2 குழந்தைகளைக் காட்டி எதிர்காலத்தில் இருவரும் கல்யாணம் பண்ணப் போறாங்கன்னு சொல்ல அதுக்கு அப்புறம் எப்படி அதைக் காட்சிகளாகத் திரையில் கொண்டு வாராங்க என படம் பார்க்க ஆர்வம் வருகிறது.

அதே போல மகாராஜா படத்தின் கதை சாதாரணமான பழிவாங்கும் கதை தான். அதை திரைக்கதையாகக் கொண்டு வந்த விதம் தான் படத்தை வெற்றி பெற வைத்தது. ஹீரோ சலூன் கடை வைத்ததே ஒரு வித்தியாசமான முயற்சி தான்.

VJS Maharaja

VJS Maharaja

இன்று தமிழ்சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் தான். ஆனால் அவர் சம்பளமே தயாரிப்பாளர்களுக்கு பெரிய பிரச்சனை தான். அவரோட சம்பளமே தயாரிப்பாளர்களின் லாபத்தையே உறிஞ்சி எடுத்து விடுகிறது. அதுதான் உண்மை. இதே போல விஜய் சேதுபதி சம்பளத்தை ஏற்றுவதும் பிரச்சனை தான். மகாராஜா படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களே கிடையாது.

இந்தப் படம் வெளியான உடனே சம்பளத்தை ஏற்றுவது தயாரிப்பாளர்களுக்குக் கடுப்பைத் தான் கிளப்பும். இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் பிளாப். அவருக்கு மார்க்கெட் இல்லை என்பது தான் உண்மை. அதனால இந்த சமயத்துல அவர் சம்பளத்தை ஏற்றுவது என்பது சரியான விஷயமா இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top