More
Categories: Cinema News latest news

லியோவில் மகனாக நடித்தது இந்த சர்ச்சை நடிகையின் மகன் தானா..! இது என்ன புது கதையா இருக்கு..!

Leo Movie: விஜய் நடிப்பில் தியேட்டரில் ஓடிக் கொண்டு இருக்கும் படம் தான் லியோ. இப்படத்திற்கு திரை விமர்சகர்கள் நிறைய நெகட்டிவ்வை அள்ளி தெளித்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான விஷயமும் கசிந்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரித்து இருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்திருந்தார். படத்தில் த்ரிஷா, சாண்டி, சஞ்சய் தத், அர்ஜூன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஸ்டேஷனில் ரவியை பிரித்து மேய்ந்த முத்து… தடாலடியாக பதில் சொன்ன ஸ்ருதி!

எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு குடும்பத்தினை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து லோகேஷ் இயக்கி இருந்தார். ஆனால் முதல் பாதியை விட இரண்டாம் பாதி தொய்வை சந்தித்து இருப்பதாக பலரும் நெகட்டிவ்வாகவே விமர்சனங்களை அள்ளி விடுகின்றனர்.

ஆனாலும் லியோ படத்தின் வசூல் 200 கோடி வரை நெருங்கி இருப்பதாக நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் எல்.சியூ கனெக்‌ஷனும் தேவையே இல்லாமல் திணித்த மாதிரியே இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய் தன்னுடைய மகன் 10வது பிறந்தநாள் என்ற ஒரு படத்தினை காட்டுவார். ஆனால் அது உண்மையாகவே வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரியுடன் அவர் இருக்கும் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எல்லா செட்டப்புக்குமே துளிர் விட்டு போச்சு போல.. செழியனை கதறவிடும் மாலினி… கடுப்பாகும் பாக்கியா..!

Published by
Akhilan

Recent Posts